காஞ்சனாவின் காதல்.. அதுவும் வாடகை வீட்டில் ஒரே அட்டகாசம்.. குறுக்கே ஹவுஸ் ஓனர் வேற.. திகைத்த தி.மலை
தச்சம்பட்டு பகுதியில் காணாமல் போனவர்களின் பட்டியலை காவல்துறையினர் சரிபார்த்ததில் உண்மை வெளிவந்துள்ளது
திருவண்ணாமலை: திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த ஹவுஸ் ஓனர் மூதாட்டியை ஆண் நண்பருடன் சேர்ந்து வாடகை வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே உள்ள கண்ணமடை காப்புக் காட்டில் பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட நிலையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, உயிரிழந்தவர் ஒரு பெண்மணி என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து தச்சம்பட்டு பகுதியில் காணாமல் போனவர்களின் பட்டியலை காவல்துறையினர் சரிபார்த்தனர். இதில் பேகோபுரம் தெருவை சேர்ந்த வெங்கடாச்சலம் மனைவி விஜயா எனும் 65 வயது மூதாட்டி காணாமல் போயுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூதாட்டிக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் இருந்திருக்கின்றன.

விசாரணை
ஒரு வீட்டில் இவர் வசித்து வந்தாலும், அடுத்த வீட்டை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார். இதனையடுத்து வாடகையில் வசித்த காஞ்சனா எனும் பெண்மணியிடம் விசாரணையை மேற்கொண்டதில் காஞ்சனா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். இதில் உண்மை சம்பவம் வெளிவந்துள்ளது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, "உயிரிழந்த மூதாட்டி விஜயாவின் வீட்டில் செல்வம்-காஞ்சனா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.

ஆண் நண்பர்
இவர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று இருக்கிறது. இந்நிலையில் கணவர் செல்வம் வேலைக்காக வெளியூர் சென்றுவிடுகையில் காஞ்சனாவும் அவரது மகனும் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். வெளியூர் சென்ற செல்வம் குடும்ப தேவைகளுக்கு சரியாக பணம் அனுப்பாமல் இருந்திருக்கிறார். இதனால் காஞ்சனா அன்றாட தேவைகளுக்கே கஷ்டப்பட்டு வந்திருக்கிறார். அப்போதுதான் இதே பகுதியை சேர்ந்த ஞானவேல் என்பவர் காஞ்சனாவுக்கு பழக்கமாகியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் நட்பாகவும் பின்னர் திருமணம் மீறிய உறவாகவும் வளர்ந்திருக்கிறது.

தனிமையில் சந்திப்பு
இதன் காரணமாக ஞானவேல் அடிக்கடி காஞ்சனாவை சந்திக்க தனிமையில் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இதனை கவனித்த மூதாட்டி விஜயா, காஞ்சனாவை கண்டித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. நிலை இப்படி இருக்கையில் காஞ்சனா வாடகை பாக்கி தாராமல் இழுக்கடித்துள்ளார். இதையொட்டி பிரச்னையை கிளப்பிய விஜயா, காஞ்சனாவை கடுமையாக பேசியிருக்கிறார். இதில் மனமுடைந்த காஞ்சனா தனது ஆண் நண்பர் ஞானவேலிடம் இது குறித்து கூற இருவரும் சேர்ந்து விஜயாவை தீர்த்துக்கட்டுவது என முடிவெடுத்துள்ளனர்.

கொலை
எனவே இதற்கேற்றார்போல் இரண்டு தினங்களுக்கு முன்னர் மூதாட்டி விஜயாவின் வீடு புகுந்து கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட காஞ்சனாவுடன் சேர்ந்து மூத்தாட்டின் சடலத்தை காப்பு காட்டிற்கு கொண்டு சென்று எரித்துள்ளனர். நேற்று காப்புக்காட்டு பக்கம் சென்ற மக்கள் கொடுத்த தகவலின் படி இந்த விஷயம் வெளியில் கசிந்திருக்கிறது" என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து காஞ்சனா அவரது ஆண் நண்பர் ஞானவேல் என இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications