பட்டாவுக்கு லஞ்சம்! விவசாயி செய்த மறக்க முடியாத சம்பவம்.. வந்தவாசியில் கையும் களவுமாக சிக்கிய விஏஓ
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தனிப்பட்டா வழங்க 5 ஆயிரம் லஞ்சம் தருமாறு கிராம நிர்வாக அலுவலர் கேட்டுள்ளார். முதல் தவணையாக 2 ஆயிரம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ பால்பாண்டியனை கையும் களவுமாக கைது செய்தனர்.
கிராம நிர்வாக அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் அடுத்தடுத்து வழக்குகளில், லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கி, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு மேற்கோண்டாலும் இந்த லஞ்சம் வாங்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம் தான். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அரங்கேறியுள்ளது.
தனிப்பட்டா வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்து இருக்கிறார்கள்.. இது குறித்த விவரம் வருமாறு:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் கணேஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தனக்கு சொந்தமான 51 சென்ட் விவசாய நிலத்தின் கூட்டுப் பட்டாவை தனிப் பட்டாவாக மாற்றி தரக் கோரி வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கணேஷ் மனு அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் பால்பாண்டியனை கணேஷ் தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார். அப்போது பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று வி.ஏ.ஓ பால்பாண்டி கேட்டுள்ளார். முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் தரும்படியும் மீதமுள்ள 3 ஆயிரத்தை பிறகு தருமாறும் கேட்டு இருக்கிறார். ஆனால், லஞ்சம் கொடுக்க மனமில்லாத கணேஷ், வி.ஏ.ஓ லஞ்சம் கேட்டது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். ..
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பணத்தை கணேஷிடம் கொடுத்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியது போலவே, , வந்தவாசியில் பால்பாண்டியன் தங்கியுள்ள அறைக்குச் சென்று நேற்று மாலை அவரிடம் கணேஷ் இந்த பணத்தை கொடுத்துள்ளார். அப்போது பணத்தை பெற்றுக்கொண்ட விஏஓ பால்பாண்டியனை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications