நைட்டு 12 மணிக்கு, மனைவிய காணோம்.. கிணற்றடியில் வந்த "சத்தம்".. ஏரிக்கரைக்கு ஓடிய கணவன்.. ஐயோ கொடுமை
திருவண்ணாமலை: நள்ளிரவு 12 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தால், மனைவியை காணவில்லை.. குழந்தைகளையும் காணவில்லை.. இதனால் பதறிப்போன கணவர், ஏரிக்கரைக்கு தலைதெறிக்க ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ளது வட்ராபுத்தூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சின்னராசு.. 38 வயதாகிறது..
இவர் அருகிலுள்ள கானலாபாடியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார்... இவரது மனைவி பெயர் சூர்யா .. 32 வயதாகிறது.. சோமாசிபாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்கு லக்ஷன் என்ற 4 வயது மகனும், உதயன் என்ற ஒரு வயது மகனும் இருக்கிறார்கள்.. சின்னராசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்திருக்கிறது..
நொந்து போன சூர்யா: தினமும் குடித்துவிட்டு வந்து, வீட்டில் தகராறு செய்து வந்ததாகவும் தெரிகிறது.. அடிக்கடி ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் மனம் நொந்து கிடந்தாராம் சூர்யா.. இப்படித்தான், சம்பவத்தன்றும் தகராறு வந்துள்ளது.. பிறகு அன்றைய தினம் இரவு சின்னராசு வெளியூர் சென்றிருக்கிறார்.. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, இரவு 1 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார்.. ஆனால், வீட்டில் சூர்யாவை காணோம்.. குழந்தைகளையும் காணவில்லை.. இதனால், அக்கம்பக்கத்தில் அவர்களை தேடியலைந்தபோதுதான், அங்கிருந்த விவசாய கிணறு ஒன்றில் சடலமாக காணப்பட்டார் சூர்யா..

குழந்தைகளையும் அதே கிணற்றில் தள்ளி கொலை செய்து, தற்கொலையும் செய்துள்ளது தெரியவந்துள்ளது. குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டை போட்டுவிட்டு, சின்னராசு வெளியூருக்கு சென்றுவிட்டதுமே, உச்சக்கட்ட விரக்தி அடைந்த சூர்யா, 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வீட்டின் பக்கத்தில் இருந்த ஏரிக்கரைக்கு சென்றிருக்கிறார்.. அங்குள்ள விவசாய கிணற்றில் முதலில் 2 மகன்களையும் வீசிவிட்டு அதற்குபிறகு, அதே கிணற்றில் குதித்துள்ளார்..

கிணற்றடியில் செல்போன்: அன்றைய தினம் இரவு ஒரு மணிக்கு சின்னராசு வீடு திரும்பியபோது கதவு திறந்தே இருந்ததாம்.. சூர்யா, குழந்தைகள் வீட்டில் இல்லை என்பதால், முதலில் அக்கம் பக்கத்தில் தேடியிருக்கிறார்.. அதற்கு பிறகு, சூர்யாவின் செல்போனுக்கு போன் செய்துள்ளார்.. பலமுறை ரிங் போயுள்ளது.. ஆனால், சூர்யா போனை எடுக்கவில்லை... அந்த போன் நீண்ட நேரமாக ஒலித்துக்கொண்டே இருந்திருக்கிறது.. நள்ளிரவு நேரத்தில் 1 மணிக்கு மேல், ஏரிக்கரை கிணற்று பக்கத்தில், செல்போன் ரிங் சத்தம் கேட்டதுமே, அக்கம் பக்கத்தினர் தூக்கம் கலைந்து எழுந்துள்ளனர்..

விவசாய கிணறு: விவசாய கிணற்றின் மேல் பகுதியில் செல்போன் ஒலி கேட்பதாக சொல்லவும், உடனே சின்னராசு அங்கு ஓடினார்.. அதற்கு பிறகுதான், கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துள்ளார்.. பிறகு, கிணற்றில் குதித்து தேடியபோதுதான், சூர்யா குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.. பின்னர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன், அதிகாலை 2.30 மணியளவில் சூரியா மற்றும் குழந்தை உதயனின் சடலத்தை மீட்டுள்ளனர்.. ஆனால், இன்னொரு குழந்தை லஷனின் சடலம் கிடைக்கவில்லை.. அதற்குள், தகவலறிந்த கீழ்பெண்ணாத்தூர் போலீசார் விரைந்து வந்து, 2 சடலங்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...
பிறகு, லஷனின் உடலை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடினர்.. 5 மணி நேரமாக தேடியும் குழந்தையின் சடலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீரை மொத்தமாக வெளியேற்றிவிட்டு, லஷனை தேடி வருகின்றனர்.. 2 குழந்தைகளுடன் இளம்தாய் தற்கொலை செய்து கொண்ட விஷயத்தை கேள்விப்பட்டு, அந்த பகுதி பொதுமக்கள் ஏரிக்கரையில் ஒன்று திரண்டு வந்துவிட்டனர்.. இந்த சம்பவம் குறித்து, சின்னராசுவிடம் தீவிர விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications