ஜோதி ஸ்வரூவமாக காட்சியளித்த சிவபெருமான்! திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் ஏற்றியவர்கள் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலையின் உச்சியில் தீபம் ஏற்றும் உரிமை யாருக்கு இருக்கிறது தெரியுமா? 15 தலைமுறைகளாக தீபம் ஏற்றி வரும் அந்த வம்சத்தை தவிர வேறு யாருக்கும் தீபம் ஏற்றும் உரிமை இல்லை.

பஞ்ச பூத தலங்களில் அக்னிதலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். நெருப்புக்கென ஒரு சக்தி உள்ளது. பஞ்சபூதங்களில் முதலில் வானம் தோன்றியது, அதிலிருந்து மழை, அதிலிருந்து நீர், அதிலிருந்து நெருப்பு, அதிலிருந்து நிலம்..

karthigai deepam 2025 tiruvannamalai 2025

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலைக்கு மாதாமாதம் பவுர்ணமியின் போது பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். அப்போது சித்தர்களும் கிரிவலம் செல்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

கிரிவலம்

இந்த நம்பிக்கையுடன் கிரிவலம் போனால், சித்தர்கள் நம் கண்களுக்கு புலப்படுவர் என சொல்லப்படுகிறது. கண்ணுக்கு தெரியாவிட்டாலும் விபூதி வாசம், சந்தன வாசம் என ஏதாவது ஒரு வகையில் அவர்கள் நமக்கு அருள்புரிவார்கள். அவர்கள் ஏதோ ஒரு மலையை சுற்றவில்லை. அந்த மலையே சிவன் என்பதால் சிவபெருமானை வலம் வருகிறார்கள் என்பதுதான் ஐதீகம்.

மலை உச்சி

இப்படிப்பட்ட அற்புதமான கோயிலில் கார்த்திகை தீபம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றுவதற்காக நேற்றுமுன் தினம் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. அது போல் 4500 கிலோ சுத்தமான நெய்யால் 1500 மீட்டர் திரி கொண்டு ஏற்றப்பட்டது.

தீபத்தை யார் ஏற்றுகிறார்கள்

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் தீபத்தை யார் ஏற்றுகிறார்கள் என்பதை நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? யார் வேண்டுமானாலும் ஏற்ற முடியாது. இந்த தீபம் ஏற்றும் உரிமை பருவத ராஜகுலத்தினருக்கு மட்டுமே உள்ளது. சுமார் 15 தலைமுறைகளுக்கும் மேலாக இவர்கள்தான் தீபம் ஏற்றி வருகிறார்கள்.

புண்ணிய வாய்ப்பு

இவர்களுக்கு இந்த புண்ணிய வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை பார்க்கலாம். முன்னொரு காலத்தில் பிரம்ம ரிஷிகளின் தியானத்தை அசுரர்கள் கலைத்து அவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தி வந்தனர். அப்போது பிரம்ம ரிஷிகள் கோபப்பட்டால், அந்த அசுரர்கள் மீன் போல் உருமாறி கடலுக்குள் போய் ஒளிந்து கொள்வர்.

அசுரர்கள் தொல்லை

இப்படி தொடர்ந்து இந்த அசுரர்கள் தொல்லை தருவதால் சிவனிடம் ரிஷிகள் முறையிட்டனர். ரிஷிகளின் இன்னலை போக்க சிவபெருமான், பருவதராஜாவை அழைத்தார். கடலில் மீன் உருவத்தில் ஒளிந்துள்ள அசுரர்களை அழிக்குமாறு உத்தரவிட்டார்.

பருவதராஜா

சிவபெருமானின் உத்தரவை உடனே ஏற்ற பருவதராஜா, கடலுக்குள் சென்று மீன் வடிவிலான அசுரர்களை பிடித்து வந்து கரையில் போட்டார். ஆனாலும் அவர் பிடியில் இருந்தும் தப்பிய அசுரர்கள் தப்பி மீண்டும் கடலுக்குள் ஒளிந்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பருவதராஜா, பார்வதி தேவியிடம் உதவி கேட்டார்.

பார்வதி தேவி

அப்போது பார்வதி தேவி, பருவதராஜனை கடலுக்குள் வலை விரிக்க சொல்லி, அதில் சிக்கிய மீன்களை எல்லாம் வாயில் போட்டு அழித்தார். அப்போது அந்த வலையில் கடலுக்கு அடியில் தவம் புரிந்த மீன மகரிஷியும் சிக்கினார். அவருடைய தவம் கலைந்ததால், அந்த கோபத்தில் மீன மகரிஷி, பருவதராஜாவை பார்த்து, "என் தவத்தை கலைத்த நீ இனி உன் ராஜ வாழ்க்கை அழிந்து, மீன் பிடித்துதான் உன் பிழைப்பை நடத்த வேண்டும்" என சாபமிட்டார்.

கார்த்திகைத் தீபம்

இதனால் அதிர்ச்சி அடைந்த பருவதராஜா, சிவனிடம் சென்று முறையிட்டார். அப்போதுதான் சிவபெருமான், "கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலையில் ஜோதி ஸ்வரூமாக காட்சி தருவேன், அந்த ஜோதியை ஏற்றும் பணியை பருவதராஜா வம்சத்தினர்தான் செய்ய வேண்டும். என்னை தரிசிக்க வரும் மக்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என சொல்லும் போது அந்த புண்ணியமெல்லம் உனக்குத்தான் சேரும்" என்றார். அன்று முதல் அந்த வம்சத்தினரே திருவண்ணாமலை தீபத்தை ஏற்றி வருகிறார்கள். அவர்களை தவிர வேறு யாரும் மலை உச்சியில் தீபம் ஏற்ற முடியாது. இது போல் கோயில்களில் ஒவ்வொரு பணிகளையும் தலைமுறை தலைமுறையாக சிலர் செய்து வருவார்கள். அவர்களை தவிர வேறு யாரும் அந்த பணிகளை செய்ய முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+