கல்யாணம் ஆகாத டீச்சர்.. கையில் குழந்தை.. கண்ணில் கண்ணீர்.. ஏமாற்றியவன் எஸ்கேப்.. போலீஸில் புகார்
இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் ஏமாற்றிவிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
ஆரணி: டீச்சருக்கு கல்யாணமே ஆகவில்லை.. ஆனால் குழந்தை பிறந்துவிட்டது.. இதையடுத்து, தன்னை ஏமாற்றியவர் மீது போலீசில் புகார் தரவும், அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கம் போல ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிய கதைதான் இதுவும். ஆனால் இதில் ஏமாந்தவர் ஒரு படித்த ஆசிரியை என்பதுதான் வருத்தத்திற்குரிய செய்தி.

ஆரணி அருகே வசித்து வருபவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரு டீச்சர். தனியார் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பிரபாகரன் என்ற இளைஞருக்கும் இடையே காதல் மூண்டது. இருவரும் விழுந்து விழுந்து காதலித்தனர். கிட்டத்தட்ட 3 வருடமாக இந்த காதல் வேள்வியை நடத்தி வந்துள்ளனர்.
ஆசை பேச்சு.. அடிக்கடி சந்திப்பு.. கடைசியில் கரு உருவாகி விட்டது டீச்சரின் வயிற்றில். இதையடுத்து கல்யாணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியை நெருக்க.. தள்ளிப் போட்டு வந்தார் பிரபாகரன். ஒரு கட்டத்தில் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி விட்டார். இந்த நிலையில் வாயும் வயிறுமாக இருந்த டீச்சருக்கு பிரசவ வலி வந்து அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
காதலும் பறி போய் கையில் குழந்தையும் ஆன நிலையில் இதற்கு மேலும் பிரபாகரனிடம் சமாதானம் பேசிக் கொண்டிருக்க முடியாது என்று முடிவெடுத்து போலீஸில் புகார் கொடுத்தார் சாந்தி. போலீஸார் இப்போது பிரபாகரனை தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.
விசாரணை நடக்கிறது. மறுபக்கம் இருவரும் சேர்ந்து வாழும் வழி குறித்த ஆலோசனைகளும் நடந்து வருகின்றனவாம். அப்பா செய்த சேட்டை எதுவும் புரியாத நிலையில் அந்த பச்சைக் குழந்தை தாயின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications