பள்ளியில் கிடந்த மது பாட்டில்கள்.. செல்வப்பெருந்தகைக்கு வந்ததே கோபம்! 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
திருவாரூர்: திருவாரூரில் ஆய்வு மேற்கொண்டபோது 2 பள்ளிகளில் மதுபாட்டில்கள் கிடந்ததால் தலைமை ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்யுமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏவும் பொதுக் கணக்குக் குழு தலைவருமான செல்வப்பெருந்தகை பரிந்துரைக்க, மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தலைமையில் 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அடங்கிய பொதுக்கணக்கு குழுவினர் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர். மேலும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளை ஆய்வு செய்தனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கல்லூரிகள், பள்ளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதி, வேளாண்மை அலுவலகங்கள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரங்கில் பொதுக்கணக்குக்குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் கமலப்புறம் அருகே உள்ள வேளுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகளில் செல்வப்பெருந்தகை தலைமையில், பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது அந்த பள்ளிக்கூடத்தில் காலி மதுபாட்டில்கள் கிடந்துள்ளன. மேலும், கழிவறைகள் மிகவும் மோசமான நிலையில் பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்துள்ளது.
உடனடியாக இதுகுறித்து பொதுக் கணக்குக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆசிரியர்களை கண்டித்துள்ளனர். அதன் பிறகு பொதுக் கணக்குக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை இதுகுறித்து உடனடியாக இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி அவர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications