மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அங்கன்வாடி பெண் ஊழியர்.. 54 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!
திருவாரூர்: எரவாஞ்சேரி பகுதியில் 10 ஆம் வகுப்பு மாணவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த அங்கன்வாடி ஊழியர் லலிதாவுக்கு (35) 54 ஆண்டுகள் சிறை, ரூ.18000 அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியில் அங்கன்வாடி ஒன்றில் பணியாற்றும் லலிதா என்பவர் 10 ஆம் வகுப்பு மாணவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசார்னை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியை அடுத்த தேதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி லலிதா (40). இவர் அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர், 2021 அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை கடத்திச் சென்று, ஊட்டி மற்றும் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் எரவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து லலிதாவை போக்சோ பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு, திருவாரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. , மாணவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த லலிதாவுக்கு 54 ஆண்டுகள் சிறை, ரூ.18000 அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி சரத் ராஜ், குற்றம்சாட்டப்பட்ட லலிதாவுக்கு, 2 போக்சோ பிரிவுகளின் கீழ் தலா 20 ஆண்டுகள், மற்றொரு போக்சோ பிரிவின் கீழ் 5 ஆண்டுகள், மேலும் 2 பிரிவுகளின் கீழ் 4 ஆண்டுகள், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் நிதி உதவி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தண்டனை பெற்ற குற்றவாளி லலிதாவை திருச்சி பெண்கள் சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications