என் மகன் விடுதலையை வைத்து அரசியல் செய்கிறார்கள்- அற்புதம்மாள் பரபரப்பு பேட்டி
Recommended Video

திருவாரூர்: ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யாததற்கு அரசியலே காரணம் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தெரிவித்தார்.
திருவாரூரில் ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கான கருத்தரங்கம் நடந்தது. இதில் அற்புதம்மாள் பங்கேற்றார். அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு, ஆளுநருக்கு அழுத்தம் தர வேண்டும். அப்போதுதான் அவர்களது விடுதலைக்கு தீர்வு கிடைக்கும்.

அரசை குறை கூற முடியாது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே அந்த அரசை குறை கூறவே முடியாது.

கையெழுத்திடவில்லை
7 பேரை விடுதலை செய்யாததற்கு காரணம் அரசியல்தான். எனது மகனை வைத்து அரசியல் செய்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விசாரணை அதிகாரியும் உச்சநீதிமன்றமும் தெரிவித்த பிறகு ஆளுநர் அந்த கோப்பில் ஏன் கையெழுத்திடவில்லை என்பது தெரியவில்லை.

விடுதலை
சட்டத்தை மதித்து 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அவர்களை இனியாவது விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்தார் அற்புதம்மாள்.

ஆளுநரின் பார்வைக்கு
குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர்களது விடுதலை குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அது ஆளுநரின் பார்வைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

விவாதம்
ஆனால் அதில் இன்னும் ஆளுநர் கையெழுத்திடவில்லை. எனினும் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 மாணவிகள் சாவுக்கு காரணமாக இருந்த 3 பேரை மட்டும் விடுதலை செய்து ஆளுநர் கையெழுத்திட்டது பெரும் விவாதத்துக்குள்ளானது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications