திருவாரூர் அரசு மருத்துவமனையில் திடீர் மின்வெட்டு.. பறிபோன பெண்ணின் உயிர்.. அண்ணாமலை அதிர்ச்சி
திருவாரூர்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், அரை மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு காரணமாக மரணமடைந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட மின்தடையால், அம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர்கள் செயலிழந்ததில், நுரையீரல் தொற்றுக்காக மருத்துவம் பெற்று வந்த அமராவதி என்ற பெண் நோயாளி உயிரிழந்தார். மின்தடைதான் உயிரிழப்புக்குக் காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் மருத்துவமனை நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.

அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், மின்தடைக்கு காரணம் பொதுப்பணித்துறைதான் என்றும் சில நிமிடங்களில் மின்தடை சரி செய்யப்பட்டு விட்டதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணமடைந்ததற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சியில், ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள், எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் இத்தகைய அவல நிலையில் இருக்கும்போது, தமிழக மருத்துவக் கட்டமைப்பை ஐரோப்பிய நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று வெட்கமே இல்லாமல் கூறிக்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், அரை மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு காரணமாக மரணமடைந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
— K.Annamalai (@annamalai_k) November 27, 2023
திமுக ஆட்சியில், ஏழை எளிய மக்கள் சிகிச்சை…
ஊழல் செய்து சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை என்றால், தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைதான் வழங்க வேண்டும் என்று ஓடோடிச் செல்லும் திமுக அரசு மற்றும் அமைச்சர்கள், ஏழை எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகளை, இத்தனை கவனக்குறைவாக நடத்துவதற்கு தமிழக பாஜக சார்பாக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துயர சம்பவத்தில் பலியான சகோதரி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.












Click it and Unblock the Notifications