ரம்ஜான் கஞ்சிக்கு அரசு தரும் அரிசி எங்களுக்கு வேணாம்.. திருத்துறைபூண்டி பள்ளிவாசல்கள் திடீர் முடிவு
ரம்ஜான் அரிசி வேண்டாம் என திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல்கள் முடிவு செய்துள்ளன
திருவாரூர்: "ரம்ஜான் கஞ்சிக்கு அரசு தரும் சலுகை அரிசி எங்களுக்கு வேண்டாம்.. சிஏஏ, குடியுரிமை சட்டம், என்ஆர்சி, என்பிஆர் போன்றவைகளை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றாமல் உள்ளது.. இதனை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்" என்று திருத்துறைப்பூண்டியின் அனைத்து பள்ளிவாசல்களும் அதிரடி முடிவினை எடுத்துள்ளன.
ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கான அனுமதியை கடந்த 2001-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அதன்படி, பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசி வருடா வருடம் வழங்கப்பட்டு வருகிறது.

இது இஸ்லாமிய மக்களுக்கு பெரிதும் உதவுகிறது.. கடந்த வருடம்கூட, இந்த ஆண்டு நோன்பு தொடங்கும் முன்னரே அரிசி வழங்குமாறு இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்று, அரிசிக்கான அனுமதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இந்த வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. வரும் 19-ம் தேதிக்குள் நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக செயலாளர் சண்முகம் அறிவித்து இருந்தார். ஆனால் இந்த அரிசியை தாங்கள் ஏற்றுக் கொள்ள போவதில்லை என திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல்கள் அறிவித்துள்ளன. இதற்கு காரணம் சிஏஏ விவகாரம்தான்.
இதுசம்பந்தமாக அவர்கள் தெரிவிக்கையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம், என்ஆர்சி, என்பிஆர் போன்றவைகளை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றாமல் உள்ளது.. அவைகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.
அதனால் அரசு தரும் சலுகை அரிசி எங்களுக்கு வேண்டாம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத்துக்குட்பட்ட நூற்றுக்கும் அதிகமான பள்ளிவாசல்கள் முடிவு செய்திருக்கின்றன.. இது சம்பந்தமான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றனர். இந்த அறிவிப்பு அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications