முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் பயணம்! தேர்தல் நெருக்கத்தில் கவனம் பெறும் டெல்டா!
திருவாரூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் செல்கிறார். இரண்டு நாட்கள் பயணமாக திருவாரூர் செல்லும் அவர், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதேபோல முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவ சிலையையும் திறந்து வைத்திருக்கிறார்.
இன்று பிற்பகல் திருவாரூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின், காட்டூர் கலைஞர் கோட்டத்தில் ஓய்வெடுக்கிறார். அங்குள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். இதனை தொடர்ந்து நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

பின்னர் காட்டூரிலிருந்து புறப்படும் முதல்வர், 'ரோடு ஷோ' மூலமாக மக்களை சந்திக்கிறார். இந்த நிகழ்வுக்காக பவித்திரமாணிக்கம், துர்காலயா சாலை, தெற்கு வீதி, பனகல் சாலை ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக இந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இன்றிரவு திருவாரூர் சன்னதி தெருவில் ஓய்வெடுக்கும் முதல்வர், நாளை அரசு விழாவில் பங்கேற்கிறார்.
திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே எஸ்எஸ் நகரில் அரசு நிகழ்ச்சி நாளை நடக்கிறது. இதற்காக 10,000 பேர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குகிறார்.
முதலமைச்சரின் இந்த பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்னும் 8 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பிரசார பயணத்தின் முன்னோட்டமாகவே இந்த பயணம் அமைய இருப்பதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், டெல்டா மாவட்டங்களிலிருந்துதான் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார். எனவே, திருவாரூர் மாவட்டம் அரசியல் ரீதியாக கவனம் பெற்றிருக்கிறது. கலைஞரின் சொந்த மாவட்டமாக இது கருதப்பட்டாலும், இன்னம் குடிநீருக்கும், மின்சாரத்திற்கும் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
மிக குறிப்பாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் இந்த மின்வெட்டால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன். மாதத்தில் ஒரு சனிக்கிழமை முழுநாள் மின்வெட்டு இருக்கிறது எனில், திங்கட்கிழமை தொடங்கி புதன், வியாழன் வரை அறிவிக்கப்படாத முழு நேர மின்வெட்டு ஏற்படுகிறது.
இது தவிர இம்மாவட்டத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன. தற்போது மன்னார்குடி மாவட்டத்தில் இந்த பணிகள் வேகமாக நடக்கிறது. நகராட்சியாக இருக்கும் இங்கு நடக்கும் வேலைகள் கூட, திருவாரூரில் நடக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம்












Click it and Unblock the Notifications