பாஜகவை விரட்டாவிட்டால் 4000 ஆண்டு பழமை கொண்ட தமிழ்நாடு மாநிலமே இல்லாமல் போய்விடும்: ஸ்டாலின் சீற்றம்
திருவாரூர்: பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டாவிட்டால் தமிழகம் என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.
திருவாரூர் மாவட்டம் காட்டுரில் கலைஞர் கோட்ட திறப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஏற்புரையாற்றினார். அவர் பேசுகையில் தலைவராகவே திருவாரூரில் என் தந்தை பிறந்தார். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்று சிறப்பித்திருக்கும் தேஜஸ்வி யாதவுக்கு நன்றி. என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்பு கோட்டையாக நான் கருதுகிறேன்.
இன்னமும் கலைஞர் வாழ்கிறார், ஆள்கிறார் என்பதன் அடையாளமாக இந்த கோட்டம் உள்ளது. வாழ்வில் எத்தனை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் என் தாய் அன்பு மாறாதவர். மன்னர்கள் தாங்கள் இருக்கும் போது கோட்டம் கட்டுவார்கள். ஆனால் மறைந்த பிறகு கோட்டம் கட்ட காரணமாக அமைந்தவர் கருணாநிதி.
வான் புகழ் வள்ளுவனுக்கு கோட்டம் எழுப்பிய கருணாநிதிக்கு திருவாரூரில் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம் இல்லத்திற்கு நிறைய இந்திய அரசியல் தலைவர்கள் வந்துள்ளனர்.
இந்த விழாவில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் திடீரென அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. ஒரு தாய் மக்கள் என்ற உணர்வோடு பணியாற்றி பாஜக அரசுக்கு முடிவு தட்ட வேண்டும். பாஜக பரப்ப வரும் காட்டுத்தீயை ஜனநாயகத்தின் விளக்கு மூலம் அணைக்க வேண்டும்.
இந்திய ஜனநாயகத்தை காக்க வேண்டிய நெருக்கடியான காலத்தில் இன்றைக்கு நாம் இருக்கிறோம். இதை செய்யாவிட்டால் 3000, 4000 ஆண்டு பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும். கலைஞருடைய உயிரினும் உயிரான உடன்பிறப்புகள் இதை செய்யாவிட்டால் வேறு யாராலும் இதை செய்ய முடியாது.
மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது, தமிழ், தமிழ்நாடு, தமிழ் இனத்திற்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கே கேடாக அமைந்துவிடும். தமிழகத்தில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். வரும் 24 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஜனநாயக விளக்கு ஏற்றப்படும். நானும் அதில் பங்கேற்கிறேன். நாளை நமதே, நாற்பதும் நமதே என முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications