"ஒன்னு நீங்க பண்ணுங்க.. இல்லை எங்களையாவது செய்ய விடுங்க.. அசிங்கமான அரசியல் இது" டிஆர்பி ராஜா ஆவேசம்

மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அதிருப்தியை வெளிப்படுத்தினார் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அதிருப்தியை வெளிப்படுத்தினார்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: "இதை நான் கஷ்டப்பட்டு வாங்கிட்டு வந்தேனே.. ஒன்னு நீங்க செய்யுங்க.. இல்ல எங்களையாவது செய்ய விடுங்க சார்.. இப்படி முட்டுக்கட்டை போட்டால் என்ன அர்த்தம்" என்று திமுக எம்எல்ஏ டிஆர்பி கேள்வி நகராட்சி அதிகாரியிடம் கேள்வி எழுப்பி உள்ளார்... கிருமிநாசினி பாதை அமைக்க முதலில் அனுமதி கொடுத்த நகராட்சி அதிகாரிகள் பின்னர் திடீரென அனுமதி மறுக்கவும் இவ்வாறு தன் ஆதங்கத்தை ராஜா வெளிப்படுத்தினார்.

Recommended Video

    'ஒன்னு நீங்க பண்ணுங்க.. இல்லை எங்களையாவது செய்ய விடுங்க.. அசிங்கமான அரசியல் இது' டிஆர்பி ராஜா ஆவேசம்

    ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்கள் வாங்க மன்னாா்குடி நகரப் பகுதியில் உழவர் சந்தை உள்ளது.. இங்கு மக்கள் அதிகமாக கூடுவர்.. எனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆபத்து உள்ளதால், கிருமி நாசினி தெளிப்புப் பாதை அமைக்க இத்தொகுதி எம்எல்ஏ டிஆா்பி. ராஜா ஏற்பாடு செய்தாா்.

    இதையடுத்து, அவரது சொந்த பணத்திலிருந்து, ரூ. 1 லட்சம் செலவில் கிருமி நாசினி தெளிப்புப் பாதையும், அதற்கான கருவிகளையும் மன்னார்குடி நகராட்சி நிா்வாகத்திடம் வழங்கினாா்.

    உபகரணங்கள்

    உபகரணங்கள்

    இந்த கிருமிநாசினி பாதை (tunnel) அமைக்க முதலில் அனுமதி கொடுத்த நகராட்சி அதிகாரிகள் பின்னர் திடீரென அனுமதி மறுத்துள்ளதாக தெரிகிறது... இயந்திரங்கள், உபகரணங்கள் எல்லாம் வாங்கிய பின்னர் நகராட்சி அதிகாரிகள் எம்எல்ஏவுக்கு முட்டுக்கட்டை போட்டதால் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    உபகரணங்கள்

    இந்த கிருமிநாசினி பாதை (tunnel) அமைக்க முதலில் அனுமதி கொடுத்த நகராட்சி அதிகாரிகள் பின்னர் திடீரென அனுமதி மறுத்துள்ளதாக தெரிகிறது... இயந்திரங்கள், உபகரணங்கள் எல்லாம் வாங்கிய பின்னர் நகராட்சி அதிகாரிகள் எம்எல்ஏவுக்கு முட்டுக்கட்டை போட்டதால் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    என்ன அர்த்தம்?

    அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் இதை பற்றி டிஆர்பி ராஜா பேசும்போது,"இதை நான் கஷ்டப்பட்டு வாங்கிட்டு வந்தேன் இல்லை.. ஒன்னு நீங்க செய்யுங்க.. இல்ல எங்களையாவது செய்ய விடுங்க சார்.. இப்படி செய்தால் என்ன அர்த்தம்" என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து அங்கிருந்த செய்தியாளர்களிடம் டிஆர்பி ராஜா வேததனையுடன் சொன்னதாவது:

    திதி

    திதி

    "இங்க கமிஷனரே ரொம்ப காலமா இல்லை.. இருக்கிறவரும் இன்சார்ஜ் கமிஷனர்தான்.. அவரையும் இப்போ காணோம்.. திடீர்னு அவங்க அப்பாவுக்கு இன்னைக்கு திதின்னு சொல்றாரு.. அது அவர் சொந்த விஷயம், நான் ஒன்னும் சொல்லல... ஆனா இங்க ஒரு நல்ல விஷயம் நடக்கும்போது இப்படி அவாய்ட் பண்றது எந்தவிதத்திலும் நல்லது இல்லை.

    கலைஞர் படம்

    கலைஞர் படம்

    இதை வெச்சி அரசியல் பண்ண நான் விரும்பல.. தலைவர் கலைஞர் எங்களை அப்படித்தான் வளர்த்திருக்காரு.. இங்க பாருங்க, இந்த உபகரணங்கள், போர்டு.. இதுல எங்கியுமே யார் தந்தாங்கன்னு பேர் கூட இல்லை, திமுக கறையும் இல்லை, எங்க தலைவர் தளபதியோட படமும் இல்லை.. கலைஞர் படமும் இல்லை.. எதுவுமே இதில இல்லை... சந்தையில் கூட்டம் அதிகம் என்பதால் இன்றே நிறுவ சொன்னேன்.. ஆனால் ஏனோ தாமதமாகிறது.

    ஆதங்கம்

    ஆதங்கம்

    இதெல்லாம் என் சொந்த காசுல வாங்கினேன் சார்.. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில இதை வாங்கல.. சொந்த காசுல வாங்கினேன்.. அப்படி சொல்லிகூட எங்களுக்கு நகராட்சியில அனுமதி தரவில்லை.. இவங்களாவது செய்யணும், இல்லைன்னா எங்களையாவது செய்ய விடணும் இல்லை?" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக, கிருமி நாசினி தெளிப்பு பாதையை, உழவா்சந்தையில் உடனடியாக அமைத்திட நகராட்சி நிா்வாகம் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையையும் எம்எல்ஏ ராஜா விடுத்தார்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+