திட்டமிட்டபடி தொடர்வேன்.. தேர்தல் பிரச்சாரத்தில் கைது செய்யப்பட்ட உதயநிதி.. விடுதலைக்கு பின் டிவிட்
திருவாரூர்: திமுக பிரச்சாரத்தின் போது கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தன்னுடைய பிரச்சார பயணம் நாளை திட்டமிட்டபடி நடக்கும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
Recommended Video

தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழகத்தில் இருக்கும் கட்சிகள் எல்லாம் சட்டசபை தேர்தலுக்கு தீவிரமாக தயாராக தொடங்கி விட்டது.
ஒரு பக்கம் பாஜக வேல்யாத்திரை நடத்தி வரும் நிலையில், இன்று திமுக சார்பாக தேர்தல் பிரச்சாரமும் தொடங்கி விட்டது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தமிழகம் முழுக்க திமுக தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

பிரச்சாரம்
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சார பயணத்தை இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார். நாகை மாவட்டம் திருக்குவளையில் இருந்து உதயநிதி ஸ்டாலின் தனது முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். இதில் திமுக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

கைது
ஆனால் இவர் பிரச்சாரத்தை தொடங்கி சில நிமிடங்களில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தடையை மீறி பிரச்சாரம் செய்ததாக கூறி உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். உதயநிதியுடன் சேர்த்து திமுக தொண்டர்கள், தலைவர்கள் பலரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பரபரப்பு
இதையடுத்து தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் செய்தனர். பெருவாரியான இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர்.

விடுதலை
இந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டு 2 மணி நேரத்திற்குள் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். திமுக தொண்டர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவரின் பிரச்சார பயணம் நாளை திட்டமிட்டபடி நடக்கும் கைது சம்பவத்தில் மத்திய அரசின் பின்புலம் இருக்கலாம், என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
|
டிவிட்
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் கைது செய்யப்பட்டு விடுதலை ஆன பின் உதயநிதி தனது கைது குறித்து டிவிட் செய்தார். அதில், #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்' பிரச்சார பயணத்தின் முதல் நாளிலேயே கிடைத்த எழுச்சி பொறுக்காமல் அடிமை அதிமுக அரசு என்னை கைது செய்தது. எனது கைதிற்கு எதிரான தமிழக மக்களின் கொந்தளிபப்புக்கு அஞ்சி தற்போது விடுவித்துள்ளது. எனது பிரச்சார பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறேன்; தொடர்வேன்., என்று கூறியுள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications