Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரியில் உரிய தண்ணீரை கேட்டு பெற தயங்கும் தமிழக அரசு..விவசாயிகள் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

மன்னார்குடி: காவிரியில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீரை கேட்டுப் பெற, தமிழக அரசு தயக்கம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தி்ற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மாதாந்திர அடிப்படையில் தண்ணீரை பெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

Farmers complaint about the Tamilnadu government is reluctant to ask water from Karnataka

குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றார். 2011-ம் ஆண்டுக்கு பிறகு 7 ஆண்டு காலம் குறுவை சாகுபடியை இதுவரை தமிழக விவசாயிகள் இழந்துள்ளனர்.

இந்நிலையில் நடப்பாண்டு குறுவை சாகுபடியை துவக்க கர்நாடகாவிடமிருந்து உரிய தண்ணீரை கேட்டுப்பெற தமிழக அரசு தொடர்ந்து தயக்கம் காட்டி வருவது கடும் கண்டனத்திற்குரியது என்றார்.

உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்ட சொல்லி, மாதாந்திர அடிப்படையில் கர்நாடகம் நமக்கு தர வேண்டிய தண்ணீரை கேட்டுப்பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கப்படுமா என்பதை நேரத்தோடு தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்

கஜா புயலால் பெரிதும் பாதிப்பிற்குள்ளான திருவாரூரில், சுமார் 30 சதவீதம் அளவிற்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதே போல ராசிமணலில் காவிரியின் குறுக்கே அணை கட்டவும் விவசாயிகள் கோரியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+