சாதிச்சுட்டடா! ஜஸ்ட் பாஸ் ஆன மாணவருக்கு கிடைத்த செம வரவேற்பு.. கேக் வெட்டி கொண்டாடிய ஃப்ரண்ட்ஸ்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஜஸ்ட் பாஸ் ஆன மணிகண்டன் என்ற மாணவருக்கு பொன்னாடை போர்த்தி, கேக் வெட்டி திருவிழா போல நண்பர்கள் கொண்டாடியது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் இன்று எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியானது. 91.55 சதவிகித பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். முதல் முறையாக பொதுத்தேர்வு எழுதிய படபடப்புடன் இருந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் இன்றைய ரிசல்ட் பார்த்த பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஏழ்மையான பின்னணியில் இருந்து கொண்டு கூட பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று பல மாணவர்களும் சாதித்து இருந்தனர். ஒரு சில மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் கூட எதிர்பார்த்த மார்க்குகள் வரைவில்லை என கவலையும் பட்டனர். சில மாணவர்களோ... ஜஸ்ட் பாஸ் மட்டுமே ஆனாலும் கூட கலங்காமல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
கேக் வெட்டி கொண்டாட்டம்: ஆனால், இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், மன்னார் குடியில் 210 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவரை பொன்னாடை போர்த்தி கேக் வெட்டி கொண்டாடி அமர்க்கள படுத்தியிருக்கிறார்கள் அவரது நண்பர்கள்...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவன் மணிகண்டன், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 210 மதிப்பெண்களே எடுத்துள்ளார். சராசரியாக ஒரு பாடத்திற்கு 42 மதிப்பெண்களே எடுத்த போதிலும் கூட மணிகண்டன், கொஞ்சம் கூட கவலைப்படவில்லை.
பொன்னாடை போர்த்தி: 10 ஆம் வகுப்பில் விட்டதை 12 ஆம் வகுப்பில் பிடித்து விடலாம்.. என்று நினைத்தாரோ என்னமோ மிகுந்த மகிழ்ச்சியாக இருந்துள்ளார். அவரது மகிழ்ச்சியை விடுங்க.. மணிகண்டனின் நண்பர்களோ.. நண்பன் 10 ஆம் வகுப்பில் பாஸ் ஆயிட்டான்... திருவிழா போல கொண்டாடுங்கல... என முடிவெடுத்து, பக்கத்து ஊரில் இருந்த கடைக்கு போய் பொன்னாடையை போர்த்தி கேக் வாங்கி வெட்டி கொண்டாடி தீர்த்துவிட்டனர்.
நெட்டிசன்கள் கருத்து: பைக்கில் ஊர்வலமாக அழைத்து சென்றதோடு ஊர்மக்களையே வியப்புடன் பார்க்க வைத்தனர் மணிகண்டனின் நண்பர்கள்.. குறைந்த மதிப்பெண்கள் எடுத்துவிட்டாமோ என கவலைப்படமால் பாசிட்டிவ் எண்ணத்துடன் மணிகண்டன் கொண்டாடிக் கொண்டு இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. நெட்டிசன்கள் சிலர் மணிகண்டனின் பாசிட்டிவ் ஆன எண்னத்திற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். சில நெட்டிசன்கள் தங்களது ஆதங்கத்தையும் பதிவிட்டு வருகிறார்கள்.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வினை தமிழ்நாடு முழுவதும், 8,94,264 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். தேர்வு எழுதிய மாணவ - மாணவிகளில் 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது இந்த ஆண்டு 91.55 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விடவும் அதிகரித்து உள்ளது என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
டாப் 5 மாவட்டங்கள்: இந்த பொதுத்தேர்வில் 3 மாணவிகள், 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் 499 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இதேபோல், தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் சிவகங்கை மாவட்டமும், மூன்றாம் இடத்தை ராமநாதபுரமும், 4வது இடத்தை கன்னியாகுமரியும், 5 ஆம் இடத்தை திருச்சி மாவட்டமும் பிடித்துள்ளது.
சென்னையை எடுத்துக்கொண்டால் 89.14 சதவிகித தேர்ச்சியுடன் 30ஆம் இடத்தில் உள்ளது. பள்ளிகள் வாரியாக பார்த்தால், அரசுப் பள்ளிகள் 87.90%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77%, தனியார் பள்ளிகள் 91.43%, இருபாலர் பள்ளி 91.93%, பெண்கள் பள்ளிகள் 93.80% என தேர்ச்சி விகிதம் இருக்கிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications