Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் இ-சேவை மையம் தொடங்குவது எப்படி? விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி நாள்.. அருமையான சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: தமிழ்நாட்டில் இ-சேவை மையம் தொடங்குவதற்கு விண்ணப்பிக்க வருகிற ஜூன் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.படித்த வேலைவாய்ப்பு பெற வேண்டும்என்ற எண்ணம் உள்ள இளைஞர்கள் இ சேவை மையத்தை தொடங்கலாம். இசேவை மையத்தை எப்படி தொடங்குவது, அரசு கூறிய வழிமுறைகள் என்ன என்பதை பார்ப்போம்.

படித்த கிராமப்புற இளைஞர்கள், பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் வசிக்கும் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இசேவை மையம் நல்ல வேலைவாய்ப்பு தரக்கூடிய சேவையாகும்.

how to start a e-service center in Tamil Nadu? June 30 is the last day to apply

இந்த இசேவை மையத்தை கிராமங்களில் ஆரம்பிக்க முடியும். உங்கள் கிராமத்தில் இல்லை என்றால் தாராளமாக நீங்கள் ஆரம்பிக்கலாம். அதற்கான வழிமுறைகள் இருக்கின்றன.

இசேவை மையங்களில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்பிப்பது, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, பாஸ்போர்ட் அப்ளை செய்வது, வங்கி கணக்கை ஆதார் உடன் இணைப்பது,பான் கார்டு பெற்றுத்தருவது, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான பல்வேறு சான்றிதழ்களை பெற்றுத்தருவது உள்பட பல்வேறு விஷயங்களை ஆன்லைனில் நீங்கள் பொதுமக்களுக்கு செய்து தரலாம்.

அதற்கான சேவை கட்டணமும் வசூலிக்கலாம். நல்ல வேலைவாய்ப்பை கிராமப்புறங்களிலேயே நீங்கள் பெறலாம். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

இசேவை மையம் தொடர்பாகதிருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.

இதன் நோக்கமானது இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அங்கு மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

இத்திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய https://tnesevai.tn.gov.in (அல்லது) https://tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வருகிற 30-ந் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்ப தாரர்களுக்குரிய பயனர் மற்றும் கடவுச்சொல் (User Id & Password) விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு மின்னஞ்சல் வழியாக வழங்கப்படும்.

மேலும், அருகில் உள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை 'முகவரி' ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை பயன்படுத்தி காணலாம் (அல்லது) https://.tnega.tn.gov.in என்ற இணை யதளத்தில் காணலாம்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+