மனைவியின் கள்ளக்காதலுடன் வேளாங்கண்ணி லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய கணவன்.. கதவை திறந்து பார்த்தால் ஷாக்!
திருவாரூர்: வேளாங்கண்ணி லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய கணவன் - மனைவி மற்றும் கணவரின் நண்பர் ஆகிய 3 பேர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக் கடிதத்தில் "யாரும் எங்கள் சாவுக்கு காரணம் இல்லை" என கூறப்பட்டிருந்தது. கள்ளக்காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் விருப்பாச்சிபுரம் பாதிரிபுரத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 49). இவரது மனைவி விஜயகுமாரி (44). கலியபெருமாளின் நண்பர் லோகநாதன்.

வேளாங்கண்ணி லாட்ஜில் ஷாக்
இந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதி லோகநாதனுடன் கணவன், மனைவி இருவரும் வேளாங்கண்ணிக்கு வந்தனர். அங்கு பேராலயத்திற்கு சொந்தமான ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். முதலில் ஒரு நாள் தான் அறை எடுத்து தங்கியிருந்தனர். பின்னர் மறுநாளும் அறையை புக் செய்திருந்தனர்.
இதற்கிடையில், பக்கத்து ரூமில் இருந்தவர்கள் எதார்த்தமாக பார்த்தபோது கலியபெருமாள் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். ஜன்னல் வழியாக பார்த்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக இது குறித்து விடுதி மேலாளரிடம் தெரிவித்தனர். அவர் உடனடியாக போலீசுக்கு அழைத்தார். அதன்பேரில் வேளாங்கண்ணி போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
தற்கொலை கடிதம்
இதில், லோகநாதன் மற்றும் விஜயகுமாரி ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டபடி தரையில் கிடந்தனர். கலியபெருமாள் தூக்கில் தொங்கியபடி இறந்திருந்தார். அறையில் சோதனை செய்தபோது ஒரு கடிதம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. அந்தக் கடிதத்தில், "நாங்கள் மூவரும் தற்கொலை செய்யப்போகிறோம். இதற்கு யாரும் காரணம் இல்லை" என்று எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து மூவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது: கலியபெருமாளின் நண்பர் லோகநாதனுக்கும் விஜயகுமாரிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஊரை விட்டு ஓடி சென்றுள்ளனர்.
மனைவி காணாமல் போனதாக
இதனால் அதிர்ச்சியடைந்த கலியபெருமாள், தனது மனைவி விஜயகுமாரி காணாமல் போய்விட்டார் என வலங்கைமான் போலீசில் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென ஒரு நாள் வந்து "என் மனைவி திரும்பிவந்துவிட்டாள்" என்று கூறி கலியபெருமாள் அந்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து தான் வேளாங்கண்ணி சென்ற அவர்கள் அங்கு அறை எடுத்து ஒன்றாக தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது. கள்ளக்காதல் பிரச்சனையால்தானா தற்கொலை செய்துக்கொண்டனர், அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications