Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைக்கேறிய மதுபோதை.. காரணமே நீதான்.. மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்.. திருவாரூரில் திக் திக்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: மன்னார்குடி அருகே தலைக்கேறிய மதுபோதையில் மாமனாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மருமகனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த திருமக்கோட்டை நல்லபிள்ளான் தெருவை சேர்ந்த அருளானந்தம் மகன் சின்னப்பன் (74). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் சமனஸ்மேரியை அதே பகுதியைச் சேர்ந்த செபஸ்டின் என்பவரின் மகன் தாமஸுக்கு (46) கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Crime Thiruvarur

இந்நிலையில், மதுப் பழக்கத்துக்கு அடிமையான தாமஸ் தினந்தோறும் வீட்டுக்கு குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதேபோல, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சமனஸ்மேரிக்கும், தாமஸுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்த சமனஸ்மேரி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அதேபகுதியில் தனது தந்தை வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து, சமனஸ்மேரியை வீட்டிற்கு திரும்ப அழைத்து வருவதற்காக பலமுறை மாமனார் வீட்டுக்கு தாமஸ் நடையாய் நடந்துள்ளார். ஆனாலும், அவருடன் செல்வதற்கு சமனஸ்மேரி மறுத்துவிட்டு தந்தை வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், திருமக்கோட்டை கடைவீதி பகுதியில் சின்னப்பன் நடந்து சென்றுள்ளார். அப்போது, தலைக்கேறிய மதுபோதையில் தாமஸ் அவரை வழிமறித்துள்ளார். என்னிடமிருந்து என் மனைவி பிரிந்ததற்கு காரணமே நீங்கள்தான் எனக் கூறி பிரச்னையில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தாமஸ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சின்னப்பனை சரமாரியாக வெட்டித் தாக்கியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்த சின்னப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே சின்னப்பன் அங்கு உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் (பொ), திருமக்கோட்டை காவல் ஆய்வாளர் (பொ)சந்தான மேரி, காவல் சார்பாய்வாளர் பிரேம்நாத் ஆகியோர் கொலைச் சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்துவிட்டு தப்பியோடி தலைமறைவான தாமஸை போலீஸார் தேடி வந்த நிலையில், சனிக்கிழமை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் மாமனாரை மருமகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+