விருப்பப்படும் தமிழிசை.. யோசிக்கும் மேலிடம்.. திருவாரூரில் பாஜக போட்டியிடுமா.. விரைவில் அறிவிப்பு?
திருவாரூர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்பது குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Recommended Video

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்பது குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இடைத்தேர்தல் காரணமாக திருவாரூர் தொகுதி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஏற்கனவே தங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டது. அதிமுக இதற்காக தீவிர ஆலோசனையில் உள்ளது.

இன்னும் இல்லை
இந்த தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்களை மற்ற கட்சிகள் அறிவித்துவிட்டாலும் இன்னும் பாஜக அறிவிக்கவில்லை. இதுகுறித்து பாஜக சார்பாக இன்னும் ஆலோசனை கூட செய்யப்படவில்லை. தேசிய தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் இதுகுறித்து கவலைபடுவதாகவும் தெரியவில்லை.

பாஜகவில் எதிர்ப்பு
பாஜகவில் இருக்கும் சில முக்கிய தலைவர் திருவாரூர் இடைத்தேர்தலில் பாஜக நிற்க கூடாது என்று கூறியதாக தகவல்கள் வருகிறது. ஏற்கனவே ஆர்.கே நகரில் தோல்வி அடைந்துவிட்டோம், திருவாரூரில் தோற்க வேண்டாம் என்று பாஜக கூறியதாக தகவல்கள் வருகிறது. இதனால் பாஜக இங்கு வேட்பாளரை நிறுத்துமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழிசை முடிவு
ஆனால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக திருவாரூர் தேர்தலில் நிற்பதையே விரும்புவதாக தெரிகிறது. பாஜக சார்பாக திருவாரூர் தேர்தலில் நல்ல வேட்பாளரை நிறுத்த தமிழிசை சௌந்தரராஜன் முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் டெல்லி பாஜக உத்தரவிற்காக அவர் காத்திருப்பதாக தகவல்கள் வருகிறது.

இன்று அறிவிப்பா
இந்த நிலையில் இன்று பாஜக இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக இன்று அறிவிக்கும். போட்டியிடாத பட்சத்தில், பாஜக தேர்தலில் யாரை ஆதரிக்க போகிறோம் என்ற நிலைப்பாட்டையும் வெளியிட வாய்ப்புள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications