"மரண ஓலம்".. ஊசலாடும் உயிர்கள்.. பஸ் டயருக்குள் போன உடல்கள்.. திருவாரூர் சாலை விபத்தில் 4 பேர் பலி
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கோர விபத்து ஒன்று நடந்துள்ளது.. இதில் பேர் துடிதுடித்து இறந்துபோயுள்ளார்கள்.. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பஸ் ஒன்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது.. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில் பாதரகுடி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே டூவீலர் ஒன்று வந்துள்ளது..
அந்த டூவீலரின் மீது மோதாமல் இருக்க அரசு சொகுசு பஸ் டிரைவர், பஸ்ஸை இடது புறமாக திருப்ப முயன்றார்.. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் நடுரோட்டில் தாறுமாறாக ஓடியது..

பிறகு, சாலையோரம் நின்றுகொண்டிருந்த டேங்கர் லாரி மீது அதிவேகமாக மோதியது... அத்துடன் நிலைகுலைந்த பஸ் மேலும் தறிகெட்டு ஓடி, எதிரே வந்த இன்னொரு டூவீலரில் பயங்கரமாக மோதியது... இதில் பைக்கில் பயணம் செய்த சிதம்பரம் பள்ளிப்படை கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன், அருள்ராஜ், பாலமுருகன் ஆகிய 3 பேரும் பஸ்சின் அடியிலி டயரில் சிக்கி கொண்டனர்.. அதிலேயே உடல்நசுடங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் அரசு சொகுசு பஸ்சில் பயணம் செய்த 44 பேரில், பஸ் டிரைவர் விஜயசாரதி உள்ளிட்ட உள்ளிட்ட 26 பேர் படுகாயம் அடைந்தனர்... உடம்பெல்லாம் ரத்தகாயம் அடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இந்த சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், பொதுமக்களும், உடனடியாக போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர்.

அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அனைவரையும் மீட்டு 108 வாகனத்தின் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால், சொகுசு பஸ் டிரைவர் விஜயசாரதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துவிட்டார்.. மேலும் படுகாயம் அடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நடந்த விபத்து குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனிடையே, விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து க்ரூட் ஆயில் கசிந்து கொண்டிருக்கிறது.. இதனால், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.. மேலும் மாற்றுச்சாலை வழியாக வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன..!!
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications