"ஆண்ட்டி ஹீரோ".. ஆந்தக்குடி வீட்டில் கவிதாவின் அக்கப்போரு.. ஏற்கனவே 2.. திருவாரூர் இளைஞரின் பரிதாபம்
திருவாரூர்: ஆந்தக்குடி வீட்டில் கவிதாவின் அக்கப்போர் எல்லை மீறியிருக்கிறது.. இறுதியில் ஒரு கொலை வரை விவகாரம் சென்றுவிட்டது.
திருவாரூர் அருகே விவாகரத்தாகி 2வது கணவருடன் வசித்து வந்த பெண்ணுடன் தகாத உறவால் ஆவின் ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

திருவாரூர் அருகே ஆந்தகுடி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா.. 40 வயதாகிறது.. இவருக்கு திருமணமாகிவிட்டது.. ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.. ஆனால், கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரிந்துவிட்டார். விவாகரத்தும் செய்துவிட்டார்.
எனவே, கோபி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். ஆனால், கோபி மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார்.. முதல் கணவருக்கு பிறந்த மகள், மகனுடன் கவிதா வசித்து வருகிறார்.. தற்போது இவரது மகள் டாக்டருக்கு படிக்கிறார்.. வெளியூரில் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்... திருவாரூரில் ஒரு தனியார் பள்ளியில் இவரது மகன், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
கவிதாவின் காதல்: இந்நிலையில், கவிதாவுக்கு ராகுல் என்ற இளைஞர் அறிமுகமானார்.. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா சேந்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் இந்த ராகுல்.. ஆவின் பால் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.. 28 வயதாகிறது.. கவிதாவின் அறிமுகம் கிடைத்ததுமே, தினமும் வீட்டுக்கு வந்துபோயிருக்கிறார்..
கவிதாவின் மகனை, பைக்கில் கொண்டுபோய் ஸ்கூலில் விட்டுவிட்டு, சாயங்காலம் ஸ்கூல் முடிந்ததும், மறுபடியும் வீட்டுக்கு அழைத்து வருவது இவரது தினசரி வேலையாக இருந்திருக்கிறது. நாளுக்கு நாள் கவிதா - ராகுல் இடையே நெருக்கம் அதிகமாகிவிட்டது.. இந்த தகாத உறவு, கவிதாவின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது..
மிரட்டல்: கவிதாவின் உறவினர் நந்தா (எ) வீரத்தமிழன், கவிதாவை கண்டித்தார்.. எச்சரித்தார்.. ஆனாலும், கவிதா தன் கள்ளக்காதலை கைவிடவில்லை.. எனவே, நேரடியாகவே ராகுல் வீட்டுக்கு சென்ற நந்தா, ராகுலின் தந்தையை மிரட்டிவிட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு ராகுல் கொலை செய்யப்பட்டுவிட்டார். சம்பவத்தன்று டியூட்டி முடிந்து வீட்டுக்கு திரும்பாததால், குடும்பத்தினர் அவரை தேடி அலைந்தனர். அப்போதுதான், பாண்டவையாற்று படித்துறை அருகே, முட்புதரில் ராகுல் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.. உடம்பெல்லாம் ரத்த காயங்கள் கிடந்தன..
வழக்கு பதிவு: ராகுலின் தலையிலேயே கொடூரமாக வெட்டி கொன்றுள்ளதும் தெரியவந்துள்ளது.. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியபோதுதான், கவிதாவின் கள்ளக்காதலும், வீரத்தமிழன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் அம்பலமானது.. இறுதியில், ராகுலை கொன்ற கவிதா, நந்தா, முருகேஷ், நிர்மல், மணிகண்டன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
முதலில், ராகுலின் சடலத்தை பார்த்ததுமே, சாலை விபத்தில் இறந்திருக்கலாம் என்றே போலீசார் நினைத்தார்கள்.. காரணம், ராகுலின் சடலம் பக்கத்திலேயே அவரது பைக்கும் விழுந்து கிடந்திருக்கிறது.. ஆனால், சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்தபோதுபோதுதான், ராகுலின் தலையில் பலத்த வெட்டுக்காயம் இருப்பது தெரியவந்தது.. அதற்கு பிறகே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்..
மிரட்டல்: ஆவின் ஊழியரான ராகுலுக்கு இன்னும் திருமணமாகவில்லை.. ஆந்தக்குடி வீட்டில் கவிதாவுடன், ராகுல் ரகசியமாக பழகிவந்தது, உறவுக்கார இளைஞர் நந்தாவுக்கு பிடிக்கவில்லை..
அதனால்தான், ராகுலை அவரது வீடு வரை சென்று மிரட்டியிருக்கிறார். எனினும் ராகுல் கள்ள உறவை கைவிடாதததுடன், கவிதாவையும், அரவது மகளையும், அன்றைய தினமே பைக்கில் கோவிலுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.. இந்த விஷயம் ராகுலுக்கு தெரிந்ததுமே மீண்டும் ஆத்திரமடைந்து, நண்பர்களுடன் சேர்ந்து ராகுலை வெட்டி சாய்த்து தெரியவந்துள்ளது.
ஹைலைட்: ராகுலை கொலை செய்துவிட்டு, நேராக கவிதாவிடம் வந்து விஷயத்தை சொன்னாராம் நந்தா.. உடனே கவிதா இந்த கொலையை மறைக்க பார்த்துள்ளார்.. அதனால், ராகுல் வீட்டுக்கு போனை போட்டு, சாலைவிபத்தில் அடிபட்டு விழுந்து கிடப்பதாக அவர்களை நம்ப வைத்துள்ளார்.. ஆனால், இதில் ஹைலைட் என்னவென்றால், ராகுலை செய்வதற்கு, ஸ்கெட்ச் போட்டு தந்ததே கவிதாதானாம்.. இது எப்படி இருக்கு?? கூடா நட்பு கேடாய்தானே முடியும்??
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications