மன்னார்குடியில் இப்படியொரு பெண்ணா? சத்தமின்றி கழிவறைக்கு போன நர்ஸ் நிஷா.. அடுத்து திகைத்த திருவாரூர்
திருவாரூர்: 15 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார் நர்ஸ்.. லீவு முடிந்து இன்றைய தினம் வெளிநாடு கிளம்ப உள்ள நிலையில், திடீரென இந்த முடிவை எடுத்துள்ளார்.. இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ளது அசேஷம் ராஜராஜன் நகர்.. இங்கு வசித்து வருபவர் கோவிந்தராஜ்.. இவர், சென்னையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.

ஃபிளைட் டிக்கெட் ரெடி
இதில், 3வது மகள் நிஷா, பி.எஸ்சி நர்சிங் படித்துள்ளார்.. சவுதி அரேபியாவில் நர்சாகவும் பணியாற்றி வருகிறார்.. கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு நிஷா வந்திருந்தார்.. நேற்றுடன் லீவு முடிந்து, இன்று மீண்டும் சவுதி அரேபியா திரும்பி செல்ல ஃபிளைட் டிக்கெட் எடுத்து இருந்தார். இதற்காக நேற்று முன்தினமே, துணிமணிகளை எடுத்து வைத்து கொண்டார்.
அன்றைய தினம், தன்னுடைய 2 அக்காக்களுடன் வீட்டில் இருந்த நிஷா, கழிவறைக்கு சென்றுள்ளார்.. ஆனால், வெகு நேரம் ஆகியும் நிஷா வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரிகள், கழிவறையின் கதவை திறந்து பார்த்தனர்.. அப்போது, நிஷா ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்..
கதறி துடித்த குடும்பம்
கூர்மையான கத்தியால் தன்னுடைய கழுத்தை, தானே அறுத்துக் கொண்டுள்ளார்.. இதைப்பார்த்து அலறிய குடும்பத்தினர், நிஷாவை மீட்டு உடனடியாக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள், நிஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மன்னார்குடி நகர போலீசார், நிஷாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்காக அனுப்பி வைத்தனர். பிறகு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர். அப்போதுதான், நிஷாவின் காதல் விவகாரம் வெளியே தெரிந்தது..
கடுமையான மன உளைச்சல்
சவுதி அரேபியாவில் நிஷா வேலை பார்த்து கொண்டிருந்தபோது, கேரளாவை சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார்.. அந்த இளைஞரும் நிஷாவை விரும்பியிருக்கிறார்.. ஆனால், அந்த இளைஞருக்கு திடீரென வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது.. இதைக்கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த நிஷா, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.. அவரால் சவுதி அரேபியாவில் இயல்பாக இருக்க முடியாமல், 15 நாள் லீவு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார்..
அப்போதும், காதலன் இன்னொரு பெண்ணை மணக்க இருப்பதை அறிந்து தாங்கி கொள்ள முடியாமல், தன்னுடைய கழுத்தை அறுத்து கொண்டு, தற்கொலை செய்து கொண்டது முதல்கட்டமாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. செல்லமாக வளர்த்து, நர்ஸ்க்கு படிக்க வைத்த மகளின், சடலத்தை கண்டு பெற்றோர் கதறி அழுதது காண்போரை உலுக்கி எடுத்துவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications