காமராஜர் வீட்டுக்கு தீ வைத்தவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள்.. சபாநாயகர் அப்பாவு ஆவேசம்
திருவாரூர்: கல்விக்காக காமராஜர் ஆற்றிய பணிகள் அளப்பறியது. ஆனால் காமராஜரையே கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய வீட்டிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தீ வைத்தனர் என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.
திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக்கல்லூரியில் "சட்டமன்ற நாயகன் கலைஞர்" என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அப்போது அப்பாவு கூறியதாவது: - முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி இந்த கருத்தரங்கில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அரங்கம் முழுவதும் பெண்கள் அதிகமாக உள்ளீர்கள்.

இதுதான் திராவிட மாடல் அரசு செய்த சாதனையாகும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கண்ட கனவு தற்போது நிறைவேறியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கல்லூரியில் 4 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதற்கு காமராஜர் கட்டிடம் என பெயர் வைக்கப்பட உள்ளது. காமராஜர் இல்லாமல் போயிருந்தால் தமிழ்நாட்டில் பலருக்கும் படிப்பு என்ற வாசனையே இல்லாமல் போயிருக்கும்.
காமராஜர் வீட்டுக்கு தீ: கல்விக்கு காமராஜர் ஆற்றிய பணி அளப்பறியது. ஆனால் காமராஜரையே கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய வீட்டிற்கு ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தீ வைத்தனர். நாட்டில் அனைவரும் படிக்க வேண்டும் என எண்ணிய காமராஜரையே வீட்டோடு தீ வைத்து எரித்துக் கொல்ல முயற்சி செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். அது மட்டும் இன்றி மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்.
இந்தியாவில் அதிக பெண்கள் பட்டம் படித்துக் கொண்டு இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பெண்கள் படிப்பது நம் நாட்டில் சிலருக்கு பிடிக்காமல் உள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களுக்குப் போதுமான நிதியை வழங்க மறுக்கிறது. புதிய கல்விக் கொள்கை என்கிற நாசகாரக் கொள்கையைக்கொண்டு வந்து, ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார்களின் கூடாரமாக கல்வியை மாற்ற முயற்சி செய்துவருகிறார்கள்" என்று கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்- காரர்களின் கூடாரம்: பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அப்பாவு கூறியதாவது:- கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தோழர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளித்திருந்தால், ஆளுநருக்குத்தான் அது பெருமையாக இருந்திருக்கும். ஆனால், ஆளுநர் அதை செய்ய மறுத்துவிட்டார். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்கள் பணி மூப்பின் அடிப்படையில்தான் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் மத்திய அரசுதான் நுழைவுத்தேர்வு வைத்து ஆசிரியர்களை தேர்வு செய்யச் சொன்னது.
மோடி ஆட்சி அமைத்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் கடன் சுமை 140 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான கடன் தொகை நாட்டிலுள்ள பெரு முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. உயர் பதவிகளில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரையே அதிகம் நியமனம் செய்து, நாட்டை ஆர்.எஸ்.எஸ்- காரர்களின் கூடாரமாக மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications