Bus Accident: நேருக்கு நேர் மோதிய பஸ்கள்.. திருவாரூர் அருகே பயங்கர விபத்து.. 20 பயணிகள் படுகாயம்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கோட்டூர்புரம் அருகே தனியார் பஸ் - அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இரு பஸ்களின் முன்பகுதிகள் பலத்த சேதமடைந்த நிலையில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு பஸ்களும் விபத்துக்குள்ளாகியதால் அந்த சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

நேருக்கு நேர் மோதி விபத்து
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடிக்கு சென்ற அரசு பேருந்தும், மன்னார் குடியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு சென்ற தனியார் பேருந்தும் தான் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. இது தொடர்பான காட்சிகள் நெஞ்சை உருவக்குவதாக அமைந்துள்ளது. இரு பஸ்களின் முன்பகுதியும் உருக்குலைந்தது. உடனடியாக அங்கிருந்த சக வாகன ஓட்டிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தவர்களை பஸ்சில் இருந்து வெளியே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உதவினர்.
விபத்துக்கான காரணம் என்ன?
மன்னார்குடி மற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. நடு ரோட்டில் இரு பஸ்களும் விபத்துக்குள்ளாகி கிடந்ததை அடுத்து அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
விபத்து கடுமையாக இருந்தாலும் நல்வாய்ப்பாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட இடமானது குறுகிய சாலை என்பதாலும், வளைவில் திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ் வேகமாக இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
தென்காசியில் நேருக்கு நேர் மோதிய பஸ்கள்
கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்காசியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்ப்ட்டது. இந்த விபத்தில் 7 பயணிகள் பலியாகினர். 60 பயணிகள் காயம் அடைந்தனர். அதேபோல, கடந்த 30 ஆம் தேதி திருப்பத்தூரில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பலியாகினர்.
அடுத்தடுத்து ஏற்படும் விபத்துகள்
அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த பேருந்து விபத்துகளினால் ஏற்பட்ட சோகம் மறையும் முன்பே மீண்டும் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பேருந்து ஒட்டுநர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் ஓய்வு அளிக்க வேண்டும்.
நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், கடவுள்தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா உண்மையாகவே பூலோக சொர்க்கம்தான். சுற்றிலும் இயற்கை சூழ்ந்த பகுதி, சுத்தமான காற்று, நீர் நிலைகள் என நம்மை மெய் மறக்க வைத்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு நெட்டிசன், 'உலகிலேயே மிக சுத்தமான கிராமத்திற்கு தகுதியானது தான் இந்த இடம். பார்க்கவே மிகவும் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் இடமாக இது இருக்கும்" என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications