ரிலையன்ஸ் பங்க் முன்பு இரும்பு பதாகைகளை உடைத்தெறிந்து டிராக்டர் பேரணியில் திருவாரூர் விவசாயிகள்!
திருவாரூர்: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற போது போலீஸார் போட்டிருந்த தடுப்புகளை இடித்து தள்ளிவிட்டு டிராக்டரை விவசாயிகள் ஓட்டிச் சென்றதால் பரபரப்பு எழுந்துள்ளது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 60 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி குடியரசு தினவிழாவின் போது டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர்.

நேற்றைய தினம் நடந்த டிராக்டர் பேரணியில் விவசாயிகளை கண்ணீர் புகை குண்டு வீசியும் தடியடி நடத்தியும் போலீஸார் கலைத்தனர். அப்போது டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாத படி வைக்கப்பட்ட தடுப்புகளை விவசாயிகள் அடித்து நொறுக்கினர்.
இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற டிராக்டர் பேரணியை ஊரார் பேச்சை கேட்டு செல்ல வழிவிடாமல் குறிப்பாக முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பங்க் முன்பு காவல்துறையால் இரும்பு பதாகைகளை வைத்து அடைத்த போது சற்றும் சிந்திக்காமல் அதை தூக்கி எறிந்த போது pic.twitter.com/17VOfgOvaF
— Poondi K Kalaiamuthan (@Kalaiamuthandmk) January 26, 2021
பல இடங்களில் தடுப்புகளை அழுத்தி பிடித்து கொண்டு டிராக்டரை உள்ளே வர விடாமல் தடுத்த போது போலீஸார் மீது வாகனத்தை ஏற்றுவது போல் டிராக்டரை ஓட்டி போலீஸாரை சிதற விட்டனர். இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications