திருவாரூரில் ஒரு கேவலமான அப்பா.. தீபாவளிக்கு புது டிரஸ் கேட்க போனால்.. நிலைகுலைந்த பெண் குழந்தை
திருவாரூர்: மதுபோதையில் சில அப்பாக்கள் செய்யும் அட்டாசங்கள் குறையவேயில்லை.. நாளுக்கு நாள் குடிபோதையால் குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றன.. பெற்ற மகள் என்றுகூட பாராமல் இந்த குடிகாரர்கள் செய்யும் அட்டூழியங்கள் ஒவ்வொன்றும், தமிழக மக்களை நிலைகுலைய செய்து வருகிறது.
கடந்த 2022ம் வருடம் நடந்த சம்பவம் இது.. நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு திருமணமாகி மனைவி, 2 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. இந்த தொழிலாளி தினமும் குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறு செய்வார். இதனால் வெறுப்படைந்த மனைவி இவரை பிரிந்து சென்றுவிட்டார்.

பாதுகாப்பு: இதனால், 2 பெண் குழந்தைகளும் அப்பாவின் பாதுகாப்பில் வளர்ந்தனர். மூத்த பெண் 10ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.. 2வது மகள், ஸ்கூலுக்கு சென்றுவிட்டாள், பட்டப்பகலில் குடிபோதையில் முதல் மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இந்த தகப்பன். இதை பற்றி வெளியே சொன்னால் கொலையே செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். இதனால், பயந்துபோன சிறுமி, யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாள்.
இதையே சாதகமாக பயன்படுத்தி, பலமுறை மகளை பலாத்காரம் செய்த நிலையில், அந்த சிறுமி கர்ப்பமானாள்.. ஒருநாள் திடீரென மயங்கி விழுந்து உடல்நிலை மோசமாகிவிட்டது. அப்போதுதான் சிறுமி கர்ப்பம் என்பதும், பெற்ற தகப்பனின் வண்டவாளமும் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வழக்கு ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் இதில் தீர்ப்பு தரப்பட்டது.
ஆயுள் தண்டனை: அந்த குடிகார அப்பாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசிடம் இருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு பெற்று தர மாவட்ட நிர்வாகத்திற்கும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
கூலி தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை பலதரப்பினரும் வரவேற்றனர். இதுபோன்ற தண்டனைகள், அடுத்த குற்றத்தை நிகழாத வண்ணம் தடுக்கும் என்றும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் நம்பப்படுகிறது.
திருவாரூர்: ஆனால், இதோ திருவாரூரில் ஒரு அப்பா செய்த காரியத்தை பாருங்கள்.. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அந்த கட்டிட தொழிலாளி.. 45 வயதாகிறது.. மனைவி, மகன், மகள் இருக்கிறார்கள்.. மகளுக்கு இப்போது 15 வயதாகிறது.
குடிகார கணவரின் தொல்லை தாங்காமல், தன்னுடைய 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு, அம்மா வீட்டுக்கு மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.. இந்த நிலையில், தீபாவளி பண்டிகை வருவதால் புத்தாடைகள், பட்டாசு மற்றும் பணம் ஆகியவற்றை வாங்குவதற்காக மகனும், மகளும், அப்பாவை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.
குடிபோதை: அப்போது குடிபோதையில் இருந்த அப்பா, பெற்ற மகள் என்றுகூட பார்க்காமல், பாலியல் தொல்லை செய்துள்ளார்.. அதுவும் தன்னுடைய மகன் கண்முன்னாடியே இந்த அக்கிரமத்தை செய்திருக்கிறார்..
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கிருந்து அழுதுகொண்டே வெளியேறி, தன்னுடைய அம்மாவிடம் நடந்ததை சொல்லி உள்ளார்.. இதைகேட்டு கொந்தளித்த அம்மா, நன்னிலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததையடுதது, கட்டிட தொழிலாளி மீது போச்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து ஜெயிலிலும் அடைத்திருக்கிறார்கள்.
பாலியல் பலாத்காரம் மட்டுமல்லாமல், பெற்ற மகள்கள் மீதான கொடூர வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டே வருகின்றன.. 10 நாட்களுக்கு முன்புகூட, உத்தரபிரதேசத்தில் ஒரு கொடுமை நடந்தது.. தன்னுடைய 10 வயது மகள், சொல்பேச்சு கேட்காமல் விளையாட்டுத்தனமாக இருப்பதாக கூறி, அவளது கால்களில் கயிறை கட்டி, தலைகீழாக தொங்கவிட்டு அடித்துள்ளார் ஒரு குரூர தந்தை...
கொடுமைகள்: இப்படி நாளுக்கு நாள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வருவது நாட்டு மக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது.. காரணங்கள் பலவாறாக இருந்தாலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது மட்டும் இன்னமும் கேள்விக்குறியாகவே தொக்கி நிற்கிறது நம்மிடம்..!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications