Thiruvarur: திருமணம் முடிந்து 5 மாசம்தான் ஆகுது.. திருவாரூர் அருகே புது மாப்பிள்ளைக்கு நடந்த துயரம்
திருவாரூர்: திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே மாமனார் வீட்டில் இருந்த மனைவியை பார்த்துவிட்டு, நள்ளிரவில் காரில் வீட்டுக்கு புறப்பட்ட போது நடக்கக்கூடாத துயர சம்பவம் நடந்துள்ளது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் தடுப்பு சுவரில் மோதி தீப்பிடித்தது. இதில் காரில் தீப்பற்றிய நிலையில் காரின் கதவுகளை திறந்து வெளியே வரமுடியாமல், காருக்குள்ளேயே இருந்து தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமணம் ஆகி 5 மாதங்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் அருகே உள்ள விஜயபுரம் செல்வம் தெருவை சேர்ந்தவர் ஹாஜி முகமது. பனகல் சாலை அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முகமது ரபிக் (வயது 28). இவருக்கு கடந்த 5 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து இருந்தார்.
கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மனைவி தன் அம்மா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதனால் மனைவியை பார்ப்பதற்காக நேற்று முன் தினம் இரவு காரில் புதுக்கோட்டைக்கு முகமது ரபீக் சென்றுள்ளார். மனைவியை பார்த்துவிட்டு நேற்று இரவு மீண்டும் திருவாரூருக்கு புறப்பட்டுள்ளார்.
திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலையில் நள்ளிரவு 2.30 மணியளவில் முகமது ரபீக் காரில் வந்துகொண்டிருந்தார். நாகை பைபாஸ் சாலை பகுதியில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலையின் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. உடனே கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. காருக்குள் சிக்கிக்கொண்ட முகமது ரபிக்கால் வெளியே வர முடியவில்லை. உதவி கேட்டு அலறியுள்ளார்.
நள்ளிரவு நேரம் என்பதால் அந்த சாலையில் அந்த நேரத்தில் யாரும் இல்லை.. கொஞ்சம் கொஞ்சமாக கார் தீப்பிடித்து முழுவதுமாக எரியத் தொடங்கியது. இதனால் கார் கதவை திறந்து வெளியே வரமுடியாமல் அப்படியே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
தீயணைப்பு படையினர் உடனடியாக காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் காருக்குள் பிணமாக உடல் கருகிய நிலையில் முகமது ரபீக் மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது, புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications