குழந்தையை பார்க்க ஏன் வந்தாய்?- கத்தியால் குத்திக்கொண்டு சண்டை- திருவாரூரில் ஷாக்!
திருவாரூர்: திருவாரூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில், குடிபோதையில் சண்டையிட்ட இருவர், ஒருவொருரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்ட சிசிடிவி பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மடவடியார் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவிக்கு, திருவாரூர் விஜயபுரத்தில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, சுரேஷின் மாமியாருக்கு பழக்கமான கண்ணன் என்பவர், குழந்தையை பார்ப்பதற்காக அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

ஏற்கனவே சுரேஷுக்கும், கண்ணனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ள நிலையில், தற்போது, தனது குழந்தையை கண்ணன் பார்க்க வந்தது, சுரேஷுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, என் குழந்தையை பார்க்க ஏன் மருத்துவமனைக்கு வந்தாய் என கண்ணனுடன், சுரேஷ் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
இருவரும் ஒருவொருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதோடு, மருத்துவமனை வளாகத்தில் இருவரும் கட்டி புரண்டு சண்டையிட்டுள்ளனர். அப்போது சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணனை குத்தி உள்ளார். இதற்கு பதிலடியாக கண்ணணும் சுரேஷை தாக்கியுள்ளார். பிரசவ மருத்துவமனை வளாகத்தில் இரண்டு பேரும் கத்தியால் மோதிக்கொண்ட சம்பவத்தால், அங்கிருந்த பெண்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, கத்தியால் குத்தப்பட்டு காயம் அடைந்த கண்ணனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். குழந்தையை பார்ப்பதற்காக வந்தவரை, மதுபோதையில் கத்தியால் குத்திய சுரேஷை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரசவ மருத்துவமனை வளாகத்தில், இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிட்டு, கத்தியால் குத்திக் கொள்ளும் சம்பவத்தின் வீடியோ பதிவு தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications