திருவாரூர் அருகே.. அத்துமீறிய வேகத்தில் போன மணல் கடத்தல் டிராக்டர்கள் மோதியதில் 2 வாலிபர்கள் பலி!
திருவாரூர் : திருவாரூர் அருகே அனுமதியில்லாமல் மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த 2 டிராக்டர்கள், சாலையில் போட்டிப் போட்டுக்கொண்டு முந்திச் செல்ல முயன்றபோது, இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில், 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு கிழக்கு கடற்கரை சாலையில் சிக்கன் கார்னர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஹாஜா நகரை சேர்ந்த ஹபிபுல்லா மகன் பயாஸ் அகமது, அதிராம்பட்டினம் சின்ன நெசவு தெருவை சேர்ந்த அப்துல் காதர் மகன் ஷகீல் அகமது ஆகிய இருவரும் வேலை பார்த்து வந்தனர்.

இருசக்கர வாகனம் மோதிய டிராக்டர்
நேற்றிரவு வழக்கம்போல் பணியை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் இருவரும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். முத்துப்பேட்டை அருகே பாமணி ஆற்று பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, சட்டவிரோதமாக மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக 2 டிராக்டர்களை ஓட்டி வந்த அதன் ஓட்டுநர்கள், ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கு கொண்டு சாலையில் முந்திச் செல்ல முயன்றனர். இதில் ஒரு டிராக்டர், எதிர்பாராத விதமாக இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள்
இந்த விபத்தில், இருச்சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த பயாஸ் அகமது, ஷகீல் அகமது ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், இருவரையும் உடனடியாக மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இளைஞர்களின் உடல்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஓட்டுநர் கைது - போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்த தகவலின்பேரின் சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை போலீசார், விபத்தை ஏற்படுத்திய இரண்டு டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். மேலும், சாலையில் முந்திச் செல்வதற்காக போட்டிப் போட்டுக்கொண்டு டிராக்டரை ஓட்டி வந்த முத்துப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கார்த்தி என்பவரை கைது செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடி மற்றொரு டிராக்டர் ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்ததோடு, சாலையில் போட்டிப் போட்டுக்கொண்டு முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications