திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக 1000 வாக்குகள் கூட வாங்காது என்பதால் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர்.. பூண்டி கலைவாணன் பரபர!

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே எதிர்பார்த்தோம் என்று திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே எதிர்பார்த்தோம் என்று திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் பேட்டி அளித்துள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. முன்னதாக வரும் ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருந்தது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் கூறப்பட்டது.

We already knew that Thiruvarur by-election will be rescinded says Poondi Kalaivanan

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திருவாரூர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் பேட்டி அளித்துள்ளார்.

அதில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து எதிர்பார்த்ததுதான். இப்படித்தான் நடக்கும் என்று ஏற்கனவே தெரியும்.

அதிமுக, பாஜக நடவடிக்கைகளை வைத்தே கணிக்க முடிந்தது. அவர்கள் கடைசி வரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. அவர்கள் இந்த முடிவை தெரிந்துதான் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தனர்.

தேர்தல் ஆணையம் தன்னாட்சியோடுதான் இயங்குகிறதா என்ற கேள்வியும், சந்தேகமும் எழுகிறது. அதிமுக-பாஜக வேட்பாளர்களை அறிவிக்காதது ஏன்?

சரியான நடவடிக்கை.. நல்லது.. திருவாரூர் தேர்தல் ரத்துக்கு தமிழிசை வரவேற்பு! சரியான நடவடிக்கை.. நல்லது.. திருவாரூர் தேர்தல் ரத்துக்கு தமிழிசை வரவேற்பு!

பாஜக ஆயிரம் வாக்குகளைக்கூட வாங்காது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய, மாநில அரசுகள் இரண்டும்தான் காரணம். அவர்களுக்கு தெரிந்துதான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது என்று பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.

English summary
We already knew that Thiruvarur by-election will be rescinded says DMK candidate Poondi Kalaivanan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X