திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு வார பரபரப்பு.. அரசியல் விறுவிறுப்பு முடிவிற்கு வந்தது.. திருவாரூர் தேர்தல் ரத்தானது ஏன்?

திருவாரூர் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Thiruvarur Election cancelled | நம்பகத்தன்மையை இழக்கிறதா தேர்தல் ஆணையம்?

    திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

    வரும் ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதேபோல் ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் கூறப்பட்டது.

    இதற்காக திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வேகமாக தயாராகி வந்தது. அதிமுக இன்று வேட்பாளரை அறிவிப்பதாக இருந்தது.

    எதிர்ப்பு உருவானது

    எதிர்ப்பு உருவானது

    ஆனால் இந்த தேர்தலை ரத்து செய்யும்படியும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது. திமுக, கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகள் கூட தேர்தலை ஒத்தி வைக்க கோரிக்கை வைத்து வந்தது. 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள போது, திருவாரூருக்கு மட்டும் தேர்தல் நடத்த கூடாது என்று கோரிக்கை வைத்து வந்தது.

    அடுத்தடுத்து நடந்த அதிரடி

    அடுத்தடுத்து நடந்த அதிரடி

    இந்த நிலையில் இது தொடர்பாக அடுத்தடுத்து அதிரடி சம்பவங்கள் சில நடந்தது.

    1. திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி திருவாரூர் தொகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மனு தாக்கல் செய்தார்.

    2. அவருக்கு அடுத்தபடியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

    3. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா இந்திய தேர்தல் ஆணையத்திலும் இந்த தேர்தலுக்கு எதிராக மனு அளித்தார்.

    என்ன கோரிக்கை வைத்தனர்

    என்ன கோரிக்கை வைத்தனர்

    இவர்கள் வைத்த கோரிக்கையில், கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது. மீட்பு பணிகள் இப்போதுதான் நடந்து வருகிறது. இதனால் தேர்தல் நடத்த கூடாது என்று கூறி இருந்தனர்.

    காரணம் சொல்லவில்லை

    காரணம் சொல்லவில்லை

    இதனால் தற்போது திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஆனால் இந்த அறிவிப்பு அறிக்கையில் தேர்தலை ஏன் ரத்து செய்தோம் என்று கூறவில்லை. தேர்தல் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

    ஏன்

    ஏன்

    ஆனாலும் மாநில கட்சிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் நிறைய மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவு பிறப்பித்தார். மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவு பிறப்பித்தார்.

    ஆலோசனை நடந்தது

    ஆலோசனை நடந்தது

    இதையடுத்து தமிழக கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்தது. அதில் பெரும்பாலான கட்சிகள் தேர்தல் நடத்த வேண்டாம் என்று கூறி இருந்தது. திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட இதே கருத்தை வைத்திருந்தது. தற்போது அவர்களின் கோரிக்கையின் படியே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர் இடை தேர்தல் ரத்து... இதற்காகத்தான் கமுக்கமாக இருந்ததா அதிமுக?? திருவாரூர் இடை தேர்தல் ரத்து... இதற்காகத்தான் கமுக்கமாக இருந்ததா அதிமுக??

    English summary
    Why Election Commission of India rescinded the Thiruvarur by-election? The real reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X