எங்கே போறீங்க! திருப்பதி செல்லும் வந்தே பாரத் ரயிலின் நேரம் மாற்றமாம் + பயணிகளுக்கு ஒரு "போனஸ்"!
திருப்பதி: திருப்பதி செல்லும் வந்தே பாரத் ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களை ரயில்வே அமைச்சகம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் என்ஜினானது தனியாக இல்லாமல் ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.

இவை சென்னையில் உள்ள பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் ஜிபிஎஸ் டிராக்கர், குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஆடிய, வீடியோ வசதி உள்ளிட்டவை இருக்கின்றன. இதில் பயணம் செய்யும் நேரம் விரைவு ரயில்கள், சூப்பர் பாஸ்ட் ரயில்களைவிட குறைவானதாகும்.
ஆனால் கட்டணம் இரட்டிப்பு மடங்கும். இந்த ரயிலில் உணவும் கொடுக்கப்படுகிறது. ஆனால் அதற்கென தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்வோர், வடமாநிலங்களுக்கு செல்வோர் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் கட்டணமாக இருந்தாலும் முன்பதிவு செய்து பயணிக்கிறார்கள். இந்த நிலையில் வடமாநிலங்களுக்கு மேலும் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பதி செல்லும் வந்தே பாரத் ரயிலின் நேரத்தில் மாற்றம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செகந்திராபாத்- திருப்பதி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடர்பாக இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று தற்போது 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த வழித்தடத்தின் வந்தே பாரத் ரயில் மே 17ஆம் தேதி முதல் 16 பெட்டிகுடன் இயங்கும்.
இந்த ரயிலை மக்கள் அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள் என்பதால் இதில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் ரயில் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் நேர மாற்றம் குறித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ட்வீட் செய்துள்ளார். செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் இந்த ரயில் செகந்திரபாத்தில் இருந்து அரைமணி நேரம் தாமதமாக புறப்படுகிறது.

தற்போது செகந்திராபாத்திலிருந்து காலை 6 திருப்பதிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மே 17 முதல் காலை 6.15 மணிக்கு புறப்படும். காலை 7.29 மணிக்கு நல்கொண்டா, 9.35 மணிக்கு குண்டூர், 11.09 மணிக்கு ஓங்கோல், மதியம் 12.29 மணிக்கு நெல்லை, பிற்பகல் 2.30 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது. மேலும் திருப்பதியில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்படுகிறது. அதே நாளில் இரவு 11.30 மணிக்கு செகந்திராபாத் நிலையத்தை சென்றடையும்.
செகந்திராபாத்- திருப்பதியை விட திருப்பதி- செகந்திராபாத் வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகம். திருப்பதியில் இருந்து திரும்பும் பயணத்தில் டிக்கெட்டுகள் அதிகமாக பதிவு செய்யப்படுகிறது. தற்போது பயணிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதால் இடங்களின் எண்ணிக்கை 530 இல் இருந்து 1036 ஆக உயரும் என்கிறார்கள். இதனால் பயணிகள் சவுகரியமாக பயணம் செய்வர் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications