டிஎஸ்பிக்கு சல்யூட் வைத்த எம்.பி.. ஆந்திராவில் வைரலாகும் போட்டோ.. ஏன் வைத்தார் தெரியுமா?
Recommended Video
அமராவதி: போலீஸ் உடையை கழற்றிவிட்டு வா என எம்பி ஒருவர் சவால் விட்டதால் உண்மையிலேயே போலீஸ் வேலையை துறந்துவிட்டு தற்போது எம்பியாகிவுள்ளார் ஆந்திர மாநில சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஒருவர்.
பொதுவாக எம்எல்ஏ, எம்பிக்களுக்கு போலீஸ் அதிகாரிகள் சல்யூட் அடிப்பதை பார்த்துள்ளோம். ஆனால் ஆந்திரத்தில் எம்பியான ஒருவர் போலீஸ் உயர் அதிகாரியை பார்த்து சல்யூட் அடிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதென்ன புது கதையா இருக்கே என ஆராய்ந்தால், சல்யூட் அடித்தவர் கோரண்டலா மாதவ். இவர் ஆந்திர மாநிலத்தில் கதிரியில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தவர். கடந்த மக்களவை தேர்தலின் போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் முறையாக போட்டியிட்டு இந்துபூர் தொகுதியின் எம்பியாகியுள்ளார்.

மகிழ்ச்சியான செய்தி
இவர் இந்துபூர் தொகுதியில் தெலுங்கு தேச கட்சியின் எம்பி கிறிஸ்டப்பா நிம்மலாவை காட்டிலும் 1,40,748 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வாக்கு எண்ணிக்கையின் போது இந்த மகிழ்ச்சியான செய்தியை கேள்விப்பட்டு வெளியே வந்த போது பழைய பாஸான துணை கண்காணிப்பாளர் மெஹபூப் பாஷாவை சந்தித்தார். அப்போது சல்யூட் அடித்தார். பதிலுக்கு பாஷாவும் சல்யூட் அடித்தார்.

எம்பி
இதுகுறித்து மாதவ் கூறுகையில் டிஎஸ்பிக்கு நான்தான் முதலில் சல்யூட் அடித்தேன். அவர் என்னுடைய உயரதிகாரியாக இருந்தவர். இது எங்களுக்கு இடையே உள்ள உணர்வுப்பூர்வமான மரியாதையாகும் என தெரிவித்தார். இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், சரி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எம்பியானது ஏன் என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஏற்பட்டது.

இன்ஸ்பெக்டர்
தாடிபத்ரியில் சின்னபோலமாடா கிராமத்தில் பெரும் வன்முறை வெடித்தது. அப்போது அங்கு வந்த அனந்தபூர் எம்பி திவாகர் ரெட்டி, ஒரு கலவரத்தை கூட கட்டுப்படுத்த முடியவில்லையா. என்ன போலீஸ் நீங்கள் என தரம் தாழ்த்தி போலீஸாரை விமர்சனம் செய்தார். அப்போது அங்கிருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த மாதவுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.

சவால்
உடனே நீங்கள் வாய்க்கு வந்தபடி போலீஸாரை பேசினால் நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம். பேசியவரின் நாக்கை அறுத்துவிடுவோம் என்றார். இதனால் கோபமடைந்த திவாகர் ரெட்டி, மாதவ் நீங்கள் போலீஸ் உடையை கழற்றி வைத்து விட்டு வாருங்கள். நானும் எனது கதர் சட்டையை கழற்றி விடுகிறேன்.

எம்பியான மாதவ்
கதிரியில் உள்ள உங்கள் வீட்டிலோ அல்லது அனந்தபூரில் உள்ள கிளாக் டவரில் வைத்துக் கொள்ளலாம். நான் வரட்டுமா, இல்லை நீங்கள் வருகிறார்களா என கேட்டார். இதனால் மாதவ் தனது போலீஸ் வேலையை விட்டுவிட்டு எம்பியாக நினைத்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது ராஜினாமாவை காவல் துறை ஏற்காததால் இவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதையடுத்து மாநில நிர்வாக தீர்ப்பாயம் தலையிட்டதன் பேரில் வேட்புமனு ஏற்கப்பட்டு தற்போது எம்பியாகியிருக்கிறார் மாதவ்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications