எரிபொருள் காலி.. வயல்வெளியில் இறங்கிய விமானம்.. ஆந்திராவில் பரபரப்பு!
Recommended Video
திருப்பதி: திருப்பதி அருகே எரி பொருள் பற்றாக்குறையால் ஆனந்தபுரம் மாவட்டத்தில் தனியார் குட்டி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஜிண்டால் நிறுவனத்திற்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று இரண்டு பேருடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளியில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, நடுவானில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட விமானி விமானத்தை திருப்பதி அருகே உள்ள அனந்தபூர் மாவட்டம் எரிதிகேரா கிராமத்தின் வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கினார். இதில் விமானத்தில் இருந்தவர்கள் அதிர்ஷடவசமாக காயமின்றி உயிர் தப்பினர். தொடர்ந்து விமானத்தை மீண்டும் அங்கிருந்து எடுத்துச் செல்வதற்கு பணிகளில் விமானத்தின் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தங்கள் கிராம வயல்வெளிப்பகுதியில் குட்டி விமானம் தரையிறங்குவதை கவனித்த கிராம மக்கள், விமானம் தரையிறக்கப்பட்ட பகுதிக்கு சென்று குட்டி விமானத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டு, செல்போனில் புகைப்படம் எடுத்து சென்றனர்.

வயலில் விமானம் இறங்கினாலும் கூடயாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications