திடீரென வந்து கட்டியணைத்த ரசிகை.. உடனே ரோஜா தந்த ரியாக்ஷன்.. திருப்பதி கோவிலில் நடந்ததை பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி கோவிலில் நடிகை ரோஜா இன்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரை பார்த்ததும் பெண் ரசிகை ஓடிச்சென்று அவரை கட்டியணைத்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரோஜா அவரை ஆரத்தழுவிய வீடியோ வெளியாகி இணையதளத்தில் பரவி வருகிறது.

90ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

roja cinima

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். 2014, 2019 ஆகிய சட்டசபை தேர்தல்களின்போது நகரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு நடிகை ரோஜா வெற்றி பெற்றார்.

இதில் கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் ரோஜாவும் அமைச்சராக செயல்பட்டார். அதன்பிறகு அவர் அமைச்சரவையில் இருந்து கழற்றிவிடப்பட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திரா சட்டசபை தேர்தலில் ரோஜா மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்தார். ரோஜாவை தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் கலிபானு பிரகாஷ் வீழ்த்தினார்.

நடிகை ரோஜா அடிக்கடி திருப்பதி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி இன்று ரோஜா திருப்பதி கோவிலுக்கு சென்றார். அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு சாமியை தரிசனம் செய்த ரோஜா தனது ஆதரவாளர்களுடன் கோவில் வளாகத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது ரோஜாவை பார்த்த ரசிகர், ரசிகைகள் செல்பி எடுத்தனர். திடீரென்று ஒரு பெண் ரசிகை நடிகை ரோஜாவை பார்த்ததும் ஓடிச்சென்று அவரை கட்டியணைத்தார். அதனை ரோஜா சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் ரசிகையின் தோளில் கைவைத்து ரோஜா ஆரத்தழுவினார். அதன்பிறகு அந்த ரசிகை ரோஜாவுடன் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டார்.

திருப்பதி கோவில் வளாகத்தில் நடிகை ரோஜாவை பார்த்ததும் ரசிகை ஓடிச்சென்று கட்டியணைத்து செல்பி எடுத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+