திருப்பதி லட்டு விவகாரம்.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் பதிலடி

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக கருத்து பதிவிட்டிருந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். அதில் மாண்புமிகு துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்களே.. இந்த விஷயம் உங்களுடைய ஆட்சி காலத்தில் தான் நடந்துள்ளது. ஏற்கனவே நாட்டுக்குள் பல சிக்கல்கள் இருக்கும் நிலையில் நீங்கள் புதிய பிரச்சினைகளை இங்கு கொண்டு வராதீர்கள் என்று கூறியுள்ளார்.

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டு தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.. கடந்த செப்டம்பர் 18ம் தேதி ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, "ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்தபோது, அவரது தலைமையிலான அரசு தான் திருப்பதி ஏழுமலையான் கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வந்தது.

tirupati prakash raj pawan kalyan

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திருமலையின் புனிதத்தையே முற்றிலுமாக கெடுத்து விட்டார்கள். அன்னதானத்தின் தரத்தில் சமரசம் செய்தும், புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியும் மாசுபடுத்தி உள்ளார்கள். எனினும், நாங்கள் (புதிய அரசு) இப்போது திருப்பதியில் மிக தூய நெய்யை பயன்படுத்துகிறோம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம்" என்று கூறினார்.

இந்த விவாகரம் நாடு முழுவதும் சர்ச்சையான நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கலயாண் வெளியிட்ட பதிவில், "இனி நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க அதற்காக தனியே கமிட்டி ஒன்று அமைக்க வேண்டும். அதாவது "சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்" என்ற ஒன்றை நாம் உடனடியாக துவங்க வேண்டும். சனாதன தர்மத்தை இழிவு படுத்தும் வகையில் நடக்கும் இந்த விஷயங்களை முடிவு கட்ட நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

நடிகரும் துணை முதல்வருமான பவன் கல்யாணுக்கு பதில் அளித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மாண்புமிகு துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்களே.. இந்த விஷயம் உங்களுடைய ஆட்சி காலத்தில் தான் நடந்துள்ளது. ஏற்கனவே நாட்டுக்குள் பல சிக்கல்கள் இருக்கும் நிலையில் நீங்கள் புதிய பிரச்சினைகளை இங்கு கொண்டு வராதீர்கள். முதலில் இந்த செயலை செய்தது யார் என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் பணியில் உங்கள் சிந்தனை இருக்கட்டும்" என்று கூறினார்.

இதேபோன்றே கருத்தையே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கூறியுள்ளார். இதுபற்றி சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் போது, "திருப்பதி லட்டு சாப்பிட்டவர்கள் எல்லாம் உயிரோடு தான் இருக்கீறார்கள். அதில் எந்த பிரச்னையும் இல்லை தானே? சரி இனிமேல் அப்படி லட்டு தயாரிக்காதீர்கள் என்று கூறிவிட்டு, யாருக்கு ஒப்பந்தம் கொடுத்தார்களோ அவர்களை நீக்கிவிட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கையை அரசு செய்யக வேண்டும். ஆனால் அதைவிட்டு விட்டு நாட்டிலேயே இதனை மிகப்பெரிய பிரச்னையாகக் கொண்டு செல்வது சரியில்லை.

கோயில், லட்டு, பூந்தி, ஜிலேப்பியை விட்டு வெளியே வர மாட்றாங்க. நாட்டு மக்களின் பிரச்னை ஒரு கோடி உள்ளது. ஆட்சியில் இருக்கிறவர்கள் உருவாக்கப்பட்ட பிரச்னையே நிறைய இருக்கிறது. அதைப் பற்றி பேசவே இல்லை. இப்போது லட்டைப் பிடித்துக்கொண்டு கிளம்பி விட்டார்கள். அப்படி செய்திருக்கக்கூடாதுதான். அது தவறு. யார் அந்த தவறைச் செய்திருக்கிறார்களோ அவர்களிடம்தான் விசாரிக்க வேண்டும்." இவ்வாறு சீமான் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+