திருப்பதியில் முதல்முறையாக கணவருடன் தரிசனம்.. நடிகை காஜல் அகர்வாலை துரத்திய "மொட்டை" நபரால் பரபரப்பு
திருப்பதி: திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த நடிகை காஜல் அகர்வாலை மொட்டை போட்டிருந்த நபர் ஒருவர் விடாமல் துரத்தி கொண்டே வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை காஜல் அகர்வால் அவரது கணவருடன் சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை தனது கணவர் ,குழந்தையுடன் திருமலைக்கு வந்தார் காஜல் அகர்வால்.
அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்த பிறகு அவருக்கு ரங்கநாயக்க மண்டபத்தில் அவருக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கணவருடன் இணைந்து தற்போது முதல்முறையாக திருப்பதிக்கு வந்துள்ளார்.

கோவிந்தா
அவர் கோயிலை விட்டு வெளியே வந்த போது கோவிந்தா என அழைத்தார். பின்னர் அவருடன் அங்கிருந்தவர்கள் செல்பி எடுத்து கொண்டனர். ரசிகர்களை பார்த்து சிரித்தபடியே வந்தார் காஜல். அப்போது மொட்டையடித்த நபர் ஒருவர் காஜல் அகர்வாலை பின்தொடர்ந்து கொண்டே வந்தார்.

முண்டியடித்த நபர்
ஒரு கட்டத்தில் அவர் முண்டியடித்தபடியே காஜல் அகர்வாலின் பக்கத்தில் வந்து அவரை பார்த்து சிரித்தார். காஜலும் பதிலுக்கு சிரித்தார். இதையடுத்து அவர் சென்றுவிட்டார். மொட்டையடித்த நபர் தொடர்ந்து காஜல் பின்னாடியே வந்து கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பதி கோயில்
அது போல் கடந்த 2018 ஆம் ஆண்டு திருப்பதி கோயிலுக்கு நடிகை காஜல் அகர்வால் சாமி கும்பிட வந்தார். அப்போது அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். செல்பி எடுக்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் ரசிகர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீஸார் கூட்டத்தினரை அப்புறப்படுத்தி காஜலை கோயிலுக்குள் அழைத்து சென்றனர்.

சிறப்பு தரிசனம்
அங்கு சிறப்பு தரிசனம் செய்த காஜலுக்கு ரங்கநாயக்க மண்டபத்தில் காஜலுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தான் மன ஆறுதலுக்காக குடும்பத்தினருடன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்ததாக காஜல் அகர்வால் தெரிவித்திருந்தார். அது போல் காஜல் வந்ததை அறிந்த பலர் மாட வீதிகளில் குவிந்தனர். பிறகு சிலருடன் செல்பி எடுத்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications