2025 புத்தாண்டில் திருப்பதி ஏழுமலையானை அருகில் இருந்து தரிசிக்க அற்புதமான வாய்ப்பு.. குட்நியூஸ்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு 19-ந்தேதி காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இந்தச் சேவை டிக்கெட்டுகளை எலக்ட்ரானிக் டிப் செய்வதற்கான ஆன்லைன் பதிவு 21-ந்தேதி காலை 10 மணி வரை செய்யலாம் என அறிவித்துள்ளது தேவஸ்தானம்.
திருப்பதி திருமலையில் சுவாமி ஏழுமலையானை தரிசிக்க கோடிக்கணக்கான பக்தர்கள் விரும்புவார்கள். அப்படி தரிசிக்க வரும் பக்தர்கள் பல மணி நேரம் திருமலையில் காத்திருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் ஸ்ரீவாரிமெட்டு பாதையில் பலமணி நேரம் நடந்து கோயிலுக்கு வர வேண்டும். அப்படி வந்தால் தான் சுவாமியை தரிக்க முடியும். அதேநேரம் திருப்பதியில் ஏழுமலையானை விரைவில் அருகில் இருந்து தரிசிக்க சில வாய்ப்புகளும் உள்ளன. இதன்படி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒவ்வொரு மாததிற்கும் வெளியிடப்படும். அந்த வகையில் வரும் 2025 ஜனவரி மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு 19-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

இதுகுறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "திருப்பதி ஏழுமலையானை 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு 19-ந்தேதி காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
இந்தச் சேவை டிக்கெட்டுகளை எலக்ட்ரானிக் டிப் செய்வதற்கான ஆன்லைன் பதிவு 21-ந்தேதி காலை 10 மணி வரை செய்யலாம். இந்த டிக்கெட்டுகளை பெறுபவர்கள் 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தினால் லக்கி டிப்பில் டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும்.
22-ந்தேதி காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும். உற்சவ சேவைகளுக்கான ஒதுக்கீடு, அவற்றின் தரிசன ஸ்லாட்டுகள் 22-ந்தேதி மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும். அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 10 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 11 மணியளவில் வெளியிடப்படும்.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய் வாய்ப்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23-ந்தேதி மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகின்றன. சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் (ரூ.300) ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணியளவில் வெளியிடப்படுகின்றன. திருமலை, திருப்பதியில் ஜனவரி மாதத்துக்கான அறைகள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும். https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications