"சினிமாவில் நடி, ஸ்ரீதேவி மாதிரி வருவாய்ம்மா" பல பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்த உதவி இயக்குநர் கைது
திருப்பதி: சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக அழைத்து வந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டார். இது போல் அவர் பல இளம்பெண்களுக்கு சினிமா ஆசைக் காட்டி உல்லாசமாக இருந்து அவர்களையும் ஏமாற்றியது தெரியவந்தது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சித்தார்த் வர்மா (30). சினிமா உதவி இயக்குநர். இவர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கொண்டாபூர் ராகவேந்திர காலனியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் சித்தார்த் வர்மாவுக்கு அறிமுகம் ஆனார். முதல் அறிமுகத்தின் போதே இளம்பெண்ணிடம் பேசிய சித்தார்த் வர்மா, எல்லை மீறியே பேசியுள்ளதாக தெரிகிறது.
அதாவது அந்த பெண்ணுக்கு சினிமா ஆசையை தூண்டுவது போல் பேசியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் அங்கங்களை எல்லாம் வர்ணித்ததாக தெரிகிறது. அந்த பெண் அழகாக இருப்பதால் நல்ல எதிர்காலம் இருக்கு என ஆசை வார்த்தை பேசி அந்த பெண்ணை மூளைச்சலவை செய்துள்ளார்.
இதை நம்பிய அந்த பெண்ணுக்கு சினிமா ஆசையும் முளைத்துவிட்டது. உடனே அவரிடம், "சார் என்னை எப்படியாவது சினிமா நடிகையாக்கிவிடுங்கள். எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது" என தெரிவித்துவிட்டு யாராவது இயக்குநர் கிடைத்தால் தனக்கு போன் செய்யுங்கள் என கூறி நம்பரையும் கொடுத்துவிட்டார்.
இதையடுத்து ஒரு நாள் சித்தார்த் வர்மா, அந்த இளம்பெண்ணுக்கு போன் செய்துள்ளார். அப்போது, "இயக்குநர்கள் சிலரிடம் பேசியுள்ளேன், அவர்களும் போட்டோ அனுப்புமாறு கேட்டனர். எனவே போட்டோ ஷூட் எடுக்க வேண்டும் உடனே எனது வீட்டுக்கு வா" என அந்த பெண்ணை சித்தார்த் அழைத்ததாக கூறப்படுகிறது.
இதை நம்பிய அந்த பெண், சித்தார்த் வர்மா வீட்டிற்கு சென்றார். அங்கு அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி! காரணம் சித்தார்த் வர்மா முழு போதையில் இருந்தார். இந்த பெண்ணை பார்த்ததும், "என்னம்மா போட்டோ எடுக்கலாமா" என கேட்டுள்ளார். அந்த பெண்ணும் "ஓ எடுக்கலாம் சார்" என கூறினார். அப்போது போட்டோ ஷூட்டில் எப்படி நிற்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும் என சித்தார்த் வர்மா, அந்த பெண்ணை தொடக் கூடாத இடங்களில் எல்லாம் தொட்டு தொட்டு சொல்லிக் கொடுத்துள்ளார்.
அப்போது திடீரென அந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல்களை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண் மறுத்துள்ளார். உடனே அந்த நபர், "எனக்கு நிறைய இயக்குநர்களையும் சினிமா தயாரிப்பைளர்களையும் தெரியும். நீ ஒத்துழைத்தால் பெரிய நடிகையாகலாம். இதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.
இதனால் அந்த பெண்ணும் சினிமா வாய்ப்புக்காக வேறு வழியில்லை என்பதால் ஒப்புக் கொண்டார். இதனால் அவ்வப்போது அந்த இளம்பெண்ணை அழைத்த சித்தார்த் வர்மா, அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால் எப்போது சினிமா வாய்ப்பு பற்றி கேட்டாலும் தன்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அது குறித்து வாய்த் திறக்காமல் இருந்துள்ளார்.
இதனால் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் தான் உடல் ரீதியாக பயன்படுத்தப்பட்டு ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்பதை அவர் அறிந்தார். உடனே அவர் கச்சிபவுலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சித்தார்த் வர்மாவை நேற்று கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது. அதன்படி மேலும் பல இளம்பெண்களுடன் இது போல் சினிமா ஆசை காட்டி சித்தார்த் உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய செல்போனில் உள்ள போன் எண்களை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!











Click it and Unblock the Notifications