ஆஸ்துமா நோயாளிகளுக்காக மீன் பிரசாதம்! முதியவர் ஒருவர் திடீர் பலி

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஆஸ்துமா நோயாளிகளுக்காக மீன் பிரசாதத்தை பெற வரிசையில் நின்ற போது முதியவர் ஒருவர் பலியானார்.

தெலுங்கானா மாநிலம், நம்பள்ளியை சேர்ந்த பாத்தினி குடும்பத்தினர் கடந்த 150 ஆண்டுகளாக ஆஸ்துமா நோயாளிகளுக்காக மிருகசிருஷ கார்த்திகை தினத்தில் ஆண்டுதோறும் மீன் பிரசாதத்தை வழங்கி வருகிறார்கள்.

hyderabad asthma fish

தெலுங்கானா, ஆந்திரா மட்டுமின்றி தமிழகம் உள்பட வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான நோயாளிகள் மீன் பிரசாதத்தை வாங்க தெலுங்கானாவுக்கு வருவது வழக்கம். ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதும் வரு் மிருகசிருஷம் கார்த்திகை நட்சத்திரத்தின் போதுதான் இந்த மீன் பிரசாதம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் நேற்று இந்த மீன் பிரசாரம் வழங்கும் நிகழ்வு தொடங்கியது. இந்த நிகழ்வை தெலுங்கானா அமைச்சர் பொன்னம் பிரபாகர், சபாநாயகர் கதம் பிரசாத் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மீன் பிரசாதத்தை வாங்க ஆஸ்துமா நோயாளிகள் லட்சக்கணக்கானோர் மைதானத்தில் குவிந்தனர். அப்போது அவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அப்போது நிஜாமாபாத் மாவட்டம் ஸ்ரீகொண்டாவை சேர்ந்த ராஜண்ணா என்ப 65 வயது முதியவர் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் ராஜண்ணாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வேகம் பேட்டை போலீஸார் குருவையில் ராஜண்ணா இறந்தது குறித்து தமக்கு புகார் ஏதும் வரவில்லை என்பதால் வழக்குப் பதிவு செய்யவில்லை என தெரிவித்தனர்.

தெலுங்கானா அமைச்சர் பொன்னம் பிரபாகர் கூறுகையில் மீன் பிரசாதம் சாப்பிட லட்சக்கணக்கானோர் மைதானத்தில் குவிந்தனர். இதற்காக 32 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு மீன் பிரசாதம் வழங்கப்பட்டது என்றார். இன்று காலை 11 மணி நிலவரப்படி 6 லட்சம் பேருக்கு மீன் பிரசாதம் வழங்கப்பட்டதாக பாத்தினி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சைவ உணவுக்காரர்களுக்கு இந்த மருந்து வெல்லத்தோடு சேர்த்து கொடுக்கப்படுகிறது. இந்த மீன் மருந்தை பெற நோயாளிகள் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். ஒரு நாளுக்கு முன்னதாக பதிவுகள் தொடங்கும். மஞ்சள் நிறத்தினாலான மருந்தை பாத்தினி குடும்பத்தினர் தயார் செய்கிறார்கள். அந்த மருந்தில் என்னென்ன போடுவார்கள் என்பது குறித்து யாருக்கும் தெரியாது.

இந்த மருந்தை விழுங்கும் நோயாளிகள் ஒரு 45 நாட்களுக்கு குறிப்பிட்ட டயட்டை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த மருந்து கிடைக்க வேண்டும் என்பதால் பாத்தினி குடும்பத்தினர் இலவசமாக மருந்தை கொடுத்து வருகிறார்கள்.

பல ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வருபவர்கள் ஒரு முறை இந்த மருந்தை எடுத்தால் போதும். இந்த மருந்து குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகிறது. உயிருடன் உள்ள மீனை எப்படி பயன்படுத்தலாம் என விலங்குகள் நல வாரியத்தினர் போர்க் கொடி எழுப்புகிறார்கள்.

இந்த பாத்தினி குடும்பத்தினர் 170 ஆண்டுகளாக மீன் மருந்தை வழங்கி வருகிறார்கள். ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலமான ஜூன் மாதத்தில் முதல் வாரத்தில் மிருகசிரீஷம், கார்த்திகை நட்சத்திர நாட்களில் இந்த மீன் மருந்து தரப்படுகிறது. நீண்ட கால ஆஸ்துமாக்களுக்கு இந்த மருந்து 3 ஆண்டுகளுக்கு சாப்பிட்டால் போதுமானது என்கிறார்கள்.

கொரோனா தொற்றின் போது இந்த மருந்து விநியோகிக்கும் பணி 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா குறைந்ததும் மீண்டும் மருந்து விநியோகிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 60 ஆண்டுகளாக இந்த மருந்து வழங்கி வந்த ஹரிநாட் கவுட் கடந்த ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+