ஒரு பக்கம் குழந்தை, மறுபக்கம் கடமை.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட பெண் போலீஸ் பண்ண தரமான நெகிழ்ச்சி சம்பவம்
திருப்பதி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள நடந்த ஒரு சம்பவம், மனிதநேயமும் கடமை உணர்வும் எப்படியெல்லாம் ஒன்றாக வெளிப்பட முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது... சம்பந்தப்பட்ட பெண் கான்ஸ்டபிளுக்கு காவல்துறையிலும், சோஷியல் மீடியாவிலும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தபடியே உள்ளது. என்ன நடந்தது?
அந்த பெண் காவலரின் பெயர் அம்த்லா ஜெயசாந்தி. இவர் ரங்கம்பேட்டை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். கடந்த 17ம் தேதி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு காக்கிநாடாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார்.

ஜெயசாந்தி பெண் போலீஸ்
அந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஜெயசாந்தியும் ஈடுபட்டிருந்தார். பணிக்காக சென்ற போது, தன்னுடைய கைக்குழந்தையை அருகிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு கடமையை நிறைவேற்றினார்.
பணி முடிந்த பிறகு, குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்ல ஜெயசாந்தி புறப்பட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக காக்கிநாடா - சமர்லகோட்டா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது... வாகனங்கள் நெரிசலில் சிக்கி திண்டாடி சிக்கி நின்றன.
அந்த நேரம் பார்த்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஒன்றும் டிராபிக் நெரிசலில் சிக்கி, முன்னே நகர முடியாமல் தவித்தது. ஆம்புலன்ஸில் உள்ள நோயாளியின் நிலை என்னவோ என்ற பதற்றம் அனைவரிடமும் இருந்தது.
இதைக் கவனித்த ஜெயசாந்தி உடனே களத்தில் குதித்தார்.. தனக்கு டியூட்டி முடிந்துவிட்டதே என்று நினைக்கவில்லை, கையில் பச்சிளம் குழந்தை உள்ளதே என்று நினைக்கவில்லை.. அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் அவருக்கு வரவில்லை..
ஆம்புலன்ஸுக்கு வழி
எந்த தயக்கமும் இன்றி, தனது குழந்தையை மார்பில் அணைத்துக்கொண்டு சாலையில் இறங்கினார். வாகன ஓட்டிகளை சமாதானப்படுத்தி, கை அசைவுகளால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார். சில நிமிடங்களில் ஆம்புலன்ஸுக்கு தேவையான வழியை உருவாக்கி, அது விரைவாக செல்ல உதவினார்.. ஒரு மனித உயிரைக் காப்பாற்றும் அந்த அவசர நேரத்தில், ஒரு தாயாகவும் காவலராகவும் அவர் எடுத்த முடிவு அனைவரையும் நெகிழ வைத்தது.
இந்த காட்சிகளை, டிராபிக்கில் நின்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளே வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்... அந்த வீடியோதான் நேற்று முதல் வைரலாகி கொண்டிருக்கிறது..
"ஒரு தாயின் பாசமும், ஒரு அரசு ஊழியரின் கடமை உணர்வும் ஒரே நேரத்தில் வெளிப்பட்ட தருணம்" என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் ஜெயசாந்தியை மனதார பாராட்டி வருகின்றனர்.
காக்கி சட்டையில் கசிந்த தாய்மை
ஆனால் அதேசமயம் , இந்த சம்பவம் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது. பணி நேரம் முடிந்த பிறகும், குழந்தையுடன் ஒரு பெண் காவலர் சாலையில் இறங்கி போக்குவரத்தை சீர்செய்ய வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? காவல்துறையில் உள்ள பணியாளர் பற்றாக்குறை, பெண் காவலர்களுக்கான குழந்தை பராமரிப்பு வசதிகள், நெகிழ்வான பணிநேரம் போன்றவை ஏன் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் வலுப்பெற்றுள்ளன.
புகை, இரைச்சல், மாசு நிறைந்த போக்குவரத்து நெரிசலில் பச்சிளம் குழந்தையுடன் நிற்பது ஆபத்தானதே. இருந்தாலும், வேறு வழியின்றி ஜெயசாந்தி எடுத்த முடிவு, அவரது மன உறுதியையும் தியாகத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த சம்பவம் வெறும் பாராட்டுகளுடன் முடிவடையாமல், நிர்வாக சீர்திருத்தங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக மாற வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது... சல்யூட் ஜெயசாந்தி...!!!
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications