லட்டுக்கு நெய்யை பயன்படுத்துவது எப்படி? திருப்பதி கோவில் கல்வெட்டு சொல்லும் ரகசியம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படும் தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் திருப்பதி லட்டு தயாரிக்க நெய் பயன்படுத்தும் முறை பற்றி கோவிலின் சுவற்றில் உள்ள கிபி 1019ம் ஆண்டின் கல்வெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது லட்டு விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதாவது திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் கலப்படம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

tirupati laddu andhra pradesh

இதுதொடர்பாக திருப்பதி லட்டு ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அப்போது திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றி எண்ணெய், சோயாபீன் உள்ளிட்ட சில பொருட்களில் ஏதேனும் கலக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். லட்டுவில் கலப்படம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். தற்போது கோவிலில் பரிகார பூஜை, ஹோமம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி திருப்பதி லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனம் பிளாக் லிஸ்ட்டில் வைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் திருப்பதியில் மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தும் நெய் குறித்த முக்கிய தகவல்கள் அங்குள்ள கல்வெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது திருமலை மற்றும் திருப்பதி கோவில்களில் மொத்தம் 1,150 கல்வெட்டுகள் உள்ளன. இதில் 700 கல்வெட்டுகள் திருமலை கோவிலின் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டுகள் அனைத்தும் கிபி 8 மற்றும் கிபி 18 ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவையாகும். இந்த கல்வெட்டுகள் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உள்ளன. இதில் கிபி 1019ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டில் திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்துக்கு பயன்படுத்தப்படும் லட்டு பற்றிய முக்கிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் பேக்கிங் செய்து திருமலை திருப்பதிக்கு கொண்டு செல்வது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டு என்பது கோவிலில் நடக்கும் சேவைகள் மற்றும் நன்கொடைகள் பற்றி அப்போதைய மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து அப்போதைய அரசர் ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்து அதுபற்றிய விபரங்களை கல்வெட்டில் பொறித்துள்ளார். இந்த கல்வெட்டு என்பது கோவிலின் ‛ஆனந்த் நிலையத்தின்' முதல் பிரகாரத்தில் வடக்கு பகுதியில் உள்ள சுவரில் உள்ளது.

அதில் பிரசாதத்துக்கு பயன்படுத்தப்படும் நெய் என்பது தினசரி முறையில் திருமலை கோவிலுக்கு எடுத்து செல்லப்பட வேண்டும். அந்த நெய் நன்கு பாதுகாக்கப்பட்ட வகையில் இருக்க வேண்டும். இந்த நெய் பிரசாதம் மற்றும் கோவில் விளக்குகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் கவனமுடன் இருக்க வேண்டும் இதனை அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும். அதன்பிறகே அந்த நெய்யை பயன்படுத்தி லட்டு தயாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிரசாதத்தை கோவில் கருவறையில் சுவாமிக்கு படைக்கும் முன்பு நியமிக்கப்பட்ட அதிகாரி அதன் தரம் மற்றும் அதன் அளவை சரிபார்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. திருப்பதி கோவில் தொடர்பான வழிபாடு மற்றும் அன்னதானத்தில் பயன்படுத்தப்படும் பிரசாதங்களை முறையாக பராமரிக்க வேண்டும். அதில் குழப்பம் ஏற்பட்டால் விசாரணை அமைப்பது பற்றிய விஷயங்களை கூறும் முதல் கல்வெட்டு இதுவாக உள்ளது. அதோடு பல்லவர் காலத்தில் இருந்தே கோவிலின் பின்பற்றப்பட்டு வரும் ‛திட்டம்' என்ற விஷயம் பற்றி இந்த கல்வெட்டு விரிவாக கூறியுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+