"மிடில் ஏஜ் மன்மதன்".. மனைவி கதற.. டாடின்னு மகள் அலற.. கள்ளக்காதலியுடன் எஸ் ஆன வெங்கடாச்சலம்!

மனைவி கண்ணெதிரே கள்ளக்காதலியுடன் சென்றுவிட்டார் கணவர்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே, மனைவி, குழந்தையை தவிக்கவிட்டு.. அவர்கள் கண்முன்னாடியே கள்ளக்காதலியுடன் பைக்கில் எஸ்கேப் ஆகியுள்ளார் மிடில்ஏஜ் மன்மதன் ஒருவர்! அவரது குழந்தை "டாடி.. டாடி.." என்று பின்னாடியே கதறி கொண்டு சென்றது காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது.

திருப்பதியில் சின்னகாப்பு வீதியை சேர்ந்தவர் வெங்கடாசலம்.. இவர் ஒரு தக்காளி வியாபாரி.. மார்க்கெட்டில் கடை வைத்திருக்கிறார்.. இவருக்கு மனைவி, 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் காதலித்து 13 வருடத்துக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டவர்கள்.

husband escape with his girl friend in tirupati police station

குடும்பம் நல்லபடியாகவும், மகிழ்ச்சியாகவும் சென்று கொண்டிருந்தது.. அப்போதுதான் அந்த பெண் குறுக்கிட்டாள்.. அவர்தான் வெங்கடாசலத்தின் கள்ளக்காதலி.. குடும்பமே தலைகீழாகிவிட்டது.. வேறு ஒரு இடத்தில் வீடு எடுத்து வைத்து கொண்டு அந்த பெண்ணுடன் குடும்பமும் நடத்த ஆரம்பித்தார் வெங்கடாசலம்.
இதில் அந்த பெண் கர்ப்பமாக இப்போது இருக்கிறாராம்.

அவர் கர்ப்பமானதுமே, சொந்த வீட்டுக்கு அடிக்கடி வருவதையும் நிறுத்தி கொண்டார் வெங்கடாசலம்.. இதன்பிறகுதான் மனைவிக்கு விஷயம் புரிந்தது.. எவ்வளவோ மன்றாடி கேட்டும் வெங்கடாசலம், அந்த பெண்ணை விட முடியாது என்று சொல்லிவிடவும், வேறு வழி தெரியாமல், திருப்பதி கிழக்கு ஸ்டேஷனில் மனைவி புகார் அளித்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசார் வெங்கடாசலத்தை ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர்..

கணவன் விசாரணைக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்ததுமே, மனைவி, தன் குழந்தையை அழைத்து கொண்டு ஸ்டேஷனுக்கு ஓடினார்.. வெங்கடேசனிடம் போலீசார் விசாரணை நடத்தி முடித்தனர்.. அப்போது வெளியே வந்த வெங்கடேசனிடம், கதறி கதறி அழுதார் மனைவி.. வீட்டுக்கு வருமாறும், அந்த பெண்ணை விட்டுவிடுமாறும் ஸ்டேஷன் வாசலிலேயே கெஞ்சினார்.

ஆனால், அங்கு பைக்கில் கள்ளக்காதலி வெங்கடேசனை அழைத்து செல்ல ரெடியாக இருந்தார்.. அதனால் வெங்கடேசன் மனைவி அழுகையை பொருட்படுத்தாமல் பைக்கில் ஏறி கொண்டார்.. இதை பார்த்த அவரது 8 வயது பெண் குழந்தை "டாடி.. டாடி.. பைக் நிறுத்துங்க" என்று பின்னாடியே ஓடியது.

ஆனால் மனைவியை கீழே தள்ளிவிட்டுவிட்டு, குழந்தை கத்துவதையும் காதில் வாங்காமல் பைக்கில் கிளம்பி சென்றார் வெங்கடேசன்.. இன்னும் டைவர்ஸ்கூட வாங்காமல், ஸ்டேஷன் வரை விஷயம் வந்திருக்கிறது என்ற பயமும் இல்லாமல், குழந்தை கதறுவதைகூட கண்ணால் பார்த்து கொண்டே வெங்கடேசன் என்ற மைனர் பைக்கில் சென்றதை என்னவென்று சொல்வது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+