Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி லட்டில் மாட்டின் கொழுப்பு! நந்தினி நெய்யை மாற்றியதுதான் காரணமா? உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் கொழுப்பு கலந்த விவகாரத்தில் லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யின் பிராண்ட்டை மாற்றியதுதான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யை உபயோகித்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக சியாமளா ராவ் நியமிக்கப்பட்டார்.

tirupati laddu tirumala

இவர் பதவி பொறுப்பேற்றதும் திருமலையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் லட்டு பிரசாதத்தின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது நெய்யில் கலப்படம் இருப்பதை கண்டறிந்த அவர், அதை பரிசோதனைக்காக பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தார்.

அப்போது நெய்யில் கலப்படம் இருந்தது தெரியவந்தது. 8.50 லட்சம் கிலோ வீதம் 5 நிறுவனங்களுக்கு டெண்டர்கள் கொடுக்கப்பட்டன. இதில் ஒரு நிறுவனம், தேவஸ்தானத்திற்கு அனுப்பிய 68 ஆயிரம் கிலோ நெய்யில் 20 ஆயிரம் கிலோ நெய் கலப்படம் செய்யப்பட்டது என தெரியவந்ததால் அவற்றை திருப்பி அனுப்பிவிட்டனர்.

இந்த நிலையில் திருப்பதி ஏழுலை கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்க தற்போது கர்நாடக மாநிலத்தின் நந்தினி நெய் வரவழைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் உபயோகிக்கப்பட்டுள்ளது.

இது அபச்சாரம். சுவாமியின் பிரசாதத்திலும் கலப்படமா? லட்டின் தரம் குறித்து பக்தர்கள் ஜெகன் மோகன் ஆட்சிக் காலத்தில் புகார் அளித்தும் அதை அவர்கள் கண்டுக் கொள்ளவே இல்லை. திருமலையின் புனிதத்தை காக்க வேண்டும். அது நமது கடமை என்றார். இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் நந்தினி நெய்யை சுவாமியின் பிரசாதத்தில் பயன்படுத்தி வந்தது கடந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டதே இந்த கலப்படங்களுக்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நித்திய அன்னதான பிரசாதத்திலும் லட்டு பிரசாதத்திலும் நந்தினி நெய்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நந்தினி நெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் விலை விவகாரங்கள் தொடர்பாக கடந்த ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு நந்தினி நெய் விநியோகத்தை நிறுத்தியது. கர்நாடகா பால் உற்பத்தியாளர்கள் சங்கமும் பால் விலை உயர்வால், நெய்யை குறைந்த விலைக்கு கொடுக்க மறுத்துவிட்டது.

ஒரு கிலோ நந்தினி நெய் 470 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நந்தினி நெய்யை திருப்பதி தேவஸ்தானம் நிறுத்தியதுமே கர்நாடகா பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பீமா நாயக் கூறுகையில் திருப்பதி லட்டு தயாரிப்பில் இருந்து நந்தினி நெய்யை அப்புறப்படுத்தியது மிக மோசமான செயல். மற்ற நிறுவன நெய்யால் தயாரிக்கப்படும் லட்டுக்கள் அந்த அளவுக்கு இருக்காது.

நந்தினி நெய்தான் மார்க்கெட்டிலேயே சிறந்த நெய், தரத்திலும் அனைத்து கட்டங்களையும் பூர்த்தி செய்துள்ளது. நந்தினி நெய்யின் விலையை விட குறைந்த விலையில் எந்த நிறுவனமாவது நெய்யை கொடுப்பதாக கூறினால், நெய்யின் தரத்தில் ஏதோ பிரச்சினை என்று அர்த்தம் என நாயக் தெரிவித்திருந்தார்.

திருப்பதியில் தினந்தோறும் 3.5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு லட்டு தயாரிக்க ரூ 40 செலவிடப்படுகிறது. தினமும் 400 முதல் 500 கிலோ நெய், 750 கிலோ முந்திரி, அரை கிலோ திராட்சை, 200 கிலோ ஏலக்காய் தேவைப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+