திருப்பதி வனப்பகுதியில் சிக்கிய 3வது சிறுத்தை.. திருமலை செல்லும் பக்தர்களின் அச்சம் நீங்கியது
திருப்பதி: அலிபிரி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 3வது சிறுத்தை சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தையை அடர் வனப்பகுதியில் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பேருந்து மூலம் மட்டுமல்லாது அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு பாதை வழியாக பாதையாத்திரையாக சென்றும் ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். பாதை யாத்திரை செல்லும் பகுதி வனப்பகுதி என்பதால் அவ்வப்போது வன விலங்குகளும் வந்து செல்லும். சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் நடமாட்டமும் இருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரடி ஒன்று அலிபிரி நடைபாதையை கடந்து சென்றது.

கடந்த ஜூன் மாதம் ஆந்திர மாநிலம், ஆதோனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். இரவு சுமார் 10 மணியளவில், 7வது மைல் அருகே ஒரு சிறுத்தை ஒன்று கவுசிக் என்ற 3 வயது சிறுவனை கவ்விக்கொண்டு ஒரு புதருக்குள் ஓடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர் கூச்சலிட்டு கத்தியபடியே சிறுத்தையின் பின்னால் ஓடினர். அங்கு காவல் பணியில் இருந்த தேவஸ்தான கண்காணிப்பு படையினரும் டார்ச் லைட் அடித்தபடி சிறுத்தையை பின் தொடர்ந்து ஓடினர். இதனால் சிறுவனை கீழே போட்டு விட்டு சிறுத்தை ஓடிவிட்டது. காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன், திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். இதனையடுத்து சிறுவனை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்து அடர் வனப்பகுதியில் விட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் திருப்பதி வந்தனர். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு செல்லத்தொடங்கினர். இரவு 8 மணியளவில் லட்சுமி நரசிம்மர்கோயிலுக்கு அருகில் செல்லும்போது பெற்றோருக்கு சற்றுமுன் நடந்து சென்றுகொண்டிருந்த லக்ஷிதா என்ற 6 வயது சிறுமி திடீரென மாயமானார். சிறுமியை பல இடங்களில் தேடிய அவர்கள் பிறகு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விடிய விடிய சிறுமியை தேடிய நிலையில் சனிக்கிழமையன்று லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு அருகில் சிறுமியின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
சிறுத்தை தாக்கி சிறுமி பலியான விவகாரம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அலிபிரி முதல் காலிகோபுரம் வரை உள்ள பகுதியில் மூன்று இடங்களிலும், காலிகோபுரத்தில் இருந்து ஏழாவது மைல் வரை உள்ள பகுதியில் ஒரு இடத்திலும் ,திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்களில் செல்ல பயன்படுத்தும் சாலையில் 38 வது வளைவு அருகே ஒரு இடத்திலும் சிறுத்தை நடமாட்டத்தை தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இதனையடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக திருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறையினர் மூன்று கூண்டுகளை அமைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் ஒரு சிறுத்தை கூண்டு ஒன்றில் புகுந்து சிக்கிக்கொண்டது. அந்த சிறுத்தையை பத்திரமாக மீட்டு வேறு பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர். இந்த நிலையில், திருப்பதி மலைப்பாதையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது. லட்சுமி நரசிம்ம சாமி கோவில் அருகே வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை பிடிப்பட்டுள்ளது. பிடிப்பட்ட சிறுத்தையை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக கைத்தடி கொடுக்கும் திட்டத்தை தேவஸ்தான நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதுவரை 3 சிறுத்தைகள் சிக்கியிருந்தாலும் கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக இணைந்தே நடந்து செல்ல வேண்டும் என்று வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications