திருப்பதியில் அமைச்சர் மகனுக்கு திருமணம்... எளிமையாக நடைபெற்ற விழா
திருப்பதி: தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் மகனுக்கு திருப்பதியில் நேற்று முன் தினம் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிள் என யாரையும் அழைக்காமல் திருமண விழாவை எளிமையாக நடத்தி முடித்துள்ளார் அமைச்சர் அன்பழகன்.
வரும் வாரத்தில் தருமபுரியில் வரவேற்பு விழா நடத்தி அதில் கட்சியினருக்கு விருந்து அளிக்க உள்ளார் அவர்.

அமைதியான மனிதர்
தமிழக அமைச்சரவையில் இருக்கும் இடம் தெரியாமல் எளிமையாக இருப்பவர் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். ஆண்டுதோறும் ஜூலை மாதம் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் போது மட்டுமே அவரை ஊடகத்தில் பார்க்க முடியும். மற்ற நேரங்களில் ஊடகங்களை கண்டாலே பத்து அடி பின்னுக்கு சென்றுவிடுவார்.

கவனமுடன்
இதனிடையே மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செல்கிற போது செய்தியாளர்களை தவிர்க்க முடியாமல் சந்தித்தால் கூட, வார்த்தைகளை கவனமுடன் கையாண்டு ஒதுங்கி கொள்வார். திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி போன்றோர் இருக்கக்கூடிய அமைச்சரவையில் இப்படியும் ஒருவர் இருக்கிறார்.

அழைப்பில்லை
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன்னுடைய மகனுக்கு திருமணம் நடத்திய அமைச்சர் அன்பழகன், கட்சியினர் யாருக்கும் அழைப்புவிடுக்கவில்லை. முதலமைச்சருக்கு கூட அழைப்பு விடுக்காமல் எளிமையான முறையில் மிக நெருங்கிய உறவுகளை மட்டும் அழைத்து திருப்பதியில் நடத்தி முடித்துள்ளார். இது தொடர்பாக நாம் விசாரித்ததில், அவரின் தனிப்பட்ட வேண்டுதல் அது அதைத் தவிர வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை என பதில் கிடைத்தது.

மணமக்களுக்கு வாழ்த்து
இந்நிலையில் தருமபுரியில் அமைச்சர் அன்பழகன் வீட்டுக்கு செல்லும் கட்சியினர் திருமணத்திற்கு அழைக்காவிடாலும் பரவாயில்லை, மணமக்களை கூப்பிடுங்கள் வாழ்த்தி விட்டு செல்கிரோம் எனக் கூறி மலர்கொத்துக்களையும், மொய்களையும் கொடுத்து செல்கின்றனர். இதனால் விரைவில் வரவேற்பு விழாவை நடத்தி அதில் தருமபுரி மாவட்ட கட்சியினருக்கு விருந்து அளிக்க உள்ளாராம் அமைச்சர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications