திருப்பதியில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட் புக்கிங் மிஸ் பண்ணிட்டீங்களா?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல் மாதம் தரிசிக்க ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டை மிஸ் செய்துவிட்டீர்களா? கவலை வேண்டாம். நாளை காலை 10 மணிக்கு ரெடியா இருங்க!
திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அது போல் விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கானோர் தரிசிக்கிறார்கள்.

ஏழுமலையானை தரிசிக்க 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். இந்த நிலையில் மாதந்தோறும் 24 ஆம் தேதி அன்று ரூ 300 தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது.
தேவஸ்தான வெப்சைட்டில் வெளியாகிறது. மாதந்தோறும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்கள் வெளியாகின்றன. இந்த நிலையில் இன்றைய தினம் கூட ஜூன் மாதத்திற்கான டிக்கெட்டுகள் வெளியாகின.
ஒரு வேளை ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட்டுகளை புக் செய்யும் போது உங்களுக்கு கிடைக்காவிட்டால் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். நாளை காலை 10 மணிக்கு திவ்ய அனுகிரக ஹோமம் என்ற டிக்கெட் வெளியாகும்.
இந்த டிக்கெட்டை வைத்து ஏப்ரல் மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். இந்த ஹோமத்திற்கான டிக்கெட் 1600 ரூபாய். இதில் தம்பதியாகவும், அல்லது இருவேறு நபர்களும் கலந்து கொள்ளலாம். இந்த 1600 ரூபாயில் 1000 ரூபாய் ஹோமத்திற்கானது மீதி ரூ 600-ல் ரூ 300 தரிசன டிக்கெட் 2 கொடுப்பார்கள்.
இதை வைத்து அன்றைய தினமே மதியம் 3 மணிக்கு நீங்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி (Alipiri) பகுதியில் அமைந்துள்ள 'சப்த கோ பிரதக்ஷிண சாலா' வில் (Saptha Gau Pradakshina Shala) இந்த ஹோமம் நடைபெறும்.
இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள காலை 8.30 மணிக்கே ரிப்போர்ட் செய்ய வேண்டும். காலை 9 மணி முதல் 11 மணி வரை இந்த ஹோமம் நடைபெறும்.
ஹோமத்தில் கலந்து கொண்டால் மட்டுமே ரூ 300 தரிசன டிக்கெட் வழங்கப்படும். இந்த ஹோம டிக்கெட்டை ஆன்லைனில் மட்டுமே பெற முடியும். ஆஃப்லைனில் இல்லை. ஆண்கள் வேட்டி, சட்டை அல்லது அங்கவஸ்திரம் அணிந்திருக்க வேண்டும். பெண்கள் புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்திருக்க வேண்டும். ஜீன்ஸ், டீசர்ட்டுக்கு அனுமதி இல்லை.
ஹோமத்தின் நன்மைகள்
வாழ்வில் வரும் தடைகள் நீங்கி, செல்வம் மற்றும் ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை.
குடும்ப ஒற்றுமை மற்றும் மன அமைதிக்காக இந்த ஹோமம் நடத்தப்படுகிறது.
பங்கேற்பாளர்களுக்குப் பிரசாதமாக அட்சதை மற்றும் ஹோம ரக்ஷை (காப்பு) வழங்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications