கைக்குழந்தைக்கான சிறப்பு தரிசனத்திற்கு திருப்பதி போறீங்க! தேவஸ்தானத்தின் முக்கிய ரூல்ஸ் இதுதான்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1 வயதுக்குள்பட்ட குழந்தைகள் தரிசனத்திற்கான நடைமுறையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதியை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பண்டிகை, விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சங்களை தாண்டும். இந்த கோயில் உண்டியல் வருமானமும் அதிகம்.

வெங்கடாஜலபதி கோயிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. ஆனால் அவற்றின் மதிப்பு முழுவதுமாக தெரியாது. பல பக்தர்கள் தங்கள் கடைசி காலத்தில் தங்கள் சொத்துகளை திருப்பதி கோயிலுக்கு உயிலாக எழுதி வைத்து விடுகிறார்கள்.
இந்த கோயிலில் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆங்கில புத்தாண்டு, தெலுங்கு வருடப்பிறப்பு, புரட்டாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் என்பதாலும் விடுமுறை நாட்கள் என்பதாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதனால் அக்டோபர் மாதம் 7,8,14,15 ஆகிய தேதிகளில் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது என தேவஸ்தான் தெரிவித்துவிட்டது. மேலும் திருப்பதி ஏழுமலையான கோயிலில் வயதானவர்கள், கைக் குழந்தையை வைத்திருப்பவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் உள்ளிட்டோருக்கென தனி வரிசையில் எளிதாக சென்று ஏழுமலையானை காணலாம்.
அதில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தரிசனத்துக்காக நடைமுறையை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 1 வயதுக்குள்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர் தெற்கு மாட வீதியில் திருமலை நம்பி சன்னதியை அடுத்து சுபதம் நுழைவாயில் வழியாக இலவச தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த தரிசனத்திற்காக ஆதார் அட்டை அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும். பெற்றோர் மற்றும் குழந்தையின் உடன்பிறந்தவர்கள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் அனைவரின் ஆதார் அட்டைகளையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும். உடன் வரும் உறவினர்களுக்கு அனுமதி கிடையாது.
தகுதியுடைய பக்தர்கள் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுபதம் நுழைவாயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மாதத்தில் ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த தரிசனத்திற்கு டிக்கெட் அல்லது முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. சிறப்பு விழா, பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் இந்த தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications