திருமலை திருப்பதி கோயிலுக்கு ரூ.21 கோடி நன்கொடை .. கோடிகளை கொட்டிக் கொடுத்த தொழில் அதிபர்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: இந்தியாவில் பல கோடிக்கணக்கான மக்களுக்கு இஷ்ட தெய்வம் என்றால் திருப்பதி ஏழுமலையான் தான். இவரது காலடியில் பல கோடிகளை கொட்டுகிறார்கள் கோடீஸ்வரர்கள். ஏழைகளோ, இவரை பார்க்க பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். இப்படியான சூழலில் பஞ்சாப் மாநிலத்தின் டிரிடென்ட் நிறுவனத்தின் தலைவர் ராஜிந்தர் குப்தா, திருப்பதி கோயிலுக்கு ரூ.21 கோடி நன்கொடை வழங்கி இருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய பணக்கார கடவுள்களில் ஒன்றாக போறப்படும் திருப்பதி ஏழுமலையான தரிசிக்க கோடீஸ்வரர்கள் முதல் ஏழைகள் வரை பலரும் தவம்இருக்கிறார். இந்த கோயில்ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் பெற்ற வைணவத் திருத்தலமாகும். இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகின்றனர்.

Rajinder Gupta chairman of Trident Punjab has donated Rs 21 crore to the Tirupati temple

இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஸ்ரீரங்கத்ற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் கொண்டாடப்படுகிறது. திருப்பதி திருமலையில் வெங்கடாசலபதி கோயிலும், திருப்பதியில் அருள்மிகு பத்மாவதி தாயார் கோயிலும் இருக்கிறது.

சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைக் கொண்ட இந்த ஏழுமலையில் அமைந்துள்ள வெங்கடாசலபதியான பாலாஜியை தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். விஐபிக்களே இங்கு தரிசனம் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல.. இங்கு சுவாமியை தரிசனம் செய்ய பல ஆயிரம் பேர் எப்போதும் காத்திருப்பார்கள் என்பதால், 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டை பெறுவதும் எளிதானது அல்ல. ஆன்லைனில் உடனே தீர்ந்துவிடும்.

திருப்பதி திருமலைக்கு வந்தவர்கள் அடிக்கடி வந்து பெருமாளை தரிசனம் செய்வது வாடிக்கை. திருமலைக்கு வந்தால் திருப்பங்கள் வரும் என்று பக்தர்கள் நம்புவதால் பலரும் வருகிறார்கள். அதுமட்டுமின்றி திருப்பதியில் ஏழுமலையானுக்கு தினசரி கோடிகளை கொட்டுகிறார்கள். இதுதவிர இக்கோயிலுக்கு பலர் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தின் டிரிடென்ட் நிறுவனத்தின் தலைவர் ராஜிந்தர் குப்தா ரூ.21 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். இதற்கான காசோலையை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் அவர் வழங்கினார். அப்போது, அவரின் குடும்பத்தினர் உடன் இருந்தனர். இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் எஸ்வி பிரன்தனா டிரஸ்ட்டிற்கு ராஜிந்தர் சிங் ரூ.21 கோடி நன்கொடை வழங்கினார் என்று கூறியுள்ளது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+